அக்ரூட், வால்நட்
அக்ரூட்டின் அறிவியல் பெயர் ‘ஜல்கன்ஸ்’ என்பதாகும். இது வால்நட்
குடும்பத்தைச் சேர்ந்தது. இது சிக்கிம், நேபாளம், மற்றும் இமாலயப் பகுதிகளில்
அதிகம் காணப்படுகிறது. முற்காலத்தில் ரோமர்களும், கிரேக்கர்களும்,
பிரெஞ்சு மக்களும் அதிக அளவில் அக்ரூட் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இதன் முழுமையான பகுதியை ‘அக்ரூட்’ என்றும், உடைந்த பகுதியை ‘வால்நட்’
என்றும் அழைப்பார்கள். வால்நட் பருப்பு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன்,
மூளை உள்ளிட்ட உள்ளுருப்புகளுக்கு அதிக நன்மை செய்கிறது.
வால்நட் மரத்தின் பட்டை, இலை, கனி போன்றவை அதிக மருத்துவப்
பயன் கொண்டது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் அதிக அளவில் இதிலுள்ளது. வால்நட் பருப்பு
ருசியானது, அதிக சத்து நிறைந்தது. வால்நட் பருப்பில் மனிதனின் மன அழுத்தத்தை
போக்கும் குணங்கள் இருப்பதாக ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து, ஆரோக்கியத்தை அதிகரிப்பதில்
வால்நட் பருப்புக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
வால்நட்டில் அடங்கியுள்ள ஊட்டசத்துக்கள்
வால்நட்டில் புரதம், கால்சியம், மெக்னீசியம், ஜிங்க், கார்போஹைட்ரேட், வைட்டமின்
ஈ போன்ற சத்துக்கள் அதிகமுள்ளது. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான
அனைத்து ஊட்டச்சத்துகளும் இந்த பருப்பில் அடங்கியுள்ளது.
வால்நட் பருப்பில் ஆன்டி ஆக்சிடன்ட்கள்(Antioxidant) அதிகம் உள்ளது.
குறிப்பாக பாலிபெனால் (Polyphenal) என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக
அதிகமாக உள்ளது. இவை உடலிலுள்ள கொழுப்பை எளிதில் கரைக்க கூடியது மற்றும் உடலின்
நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
100 கிராம் வால்நட்டில், கொலஸ்ட்ரால் 0 கி, சோடியம் 2 மிகி, பொட்டாசியம் 441 மிகி, புரதச்சத்து
15 கி, விட்டமின் A, B, C, D,
E, K விட்டமின் பி12 மற்றும் கால்சியம் போன்ற
சத்துக்கள் உள்ளன. வால்நட்டில் கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது. வால்நட்டில் ஒமேக 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. மேலும் செம்பு,
டிரிப்டோபான், மற்றும் மாங்கனீஸ் சத்துக்களும்
நீக்கமற நிறைந்துள்ளது. இதனால் உடலில் இருக்கும் கெட்டக் கொழுப்பை குறைக்கவும்,
மற்றும் வெளியேற்றவும் உதவுகிறது.
வால்நாட்டின் மருத்துவ பயன்கள்
மூளை செயல்பாடு அதிகரிக்கும்
வால்நட் பருப்பில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத
பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு
பெற்று, நன்கு வேலை செய்யும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
ஆண்மை தன்மை அதிகரிக்கும்
வால்நட் தினமும் சாப்பிடுவதன் மூலம் ஆண்களுக்கு ஆண்மை
பெருகும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதற்கு
காரணம் வால்நட்டில் உயர்தர ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. அதுவே ஆண்களின்
உற்சாகத்தையும், விந்தணுவையும் அதிகரிக்கிறது.
இதய ஆரோக்கியம் மேம்படும்
தினமும் 28 கிராம் முதல் 85 கிராம் அளவு வரை வால்நட் பருப்பு
சாப்பிட்டு வந்தால், ஆறு மாதங்களில் கெட்ட கொழுப்பு குறைந்து,
இதயம் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் குணமாகிறதாம்.
பித்தப்பை கற்களை கரைக்கும்
நமது உடலில் ஈரல் மற்றும் பித்தப்பை உடலுக்கு தேவையான
சக்திகளை உற்பத்தி செய்கிறது. பித்தப்பைகளில் சிலருக்கு கற்கள் உருவாகின்றன. வால்நட்ஸ்
பருப்புகளை தொடர்ந்து சாப்பிடும்போது அந்த கற்களை கரைத்து சிறப்பாக செயல்படுகிறது.
மார்பக புற்றுநோயை தடுக்கும்
இப்போதைய காலகட்டத்தில் பருவமடைந்த பெண்கள் அனைவரையும்
அச்சுறுத்தும் நோயாக மார்பக புற்று நோய் இருந்து வருகிறது. வால்நட்ஸ் பருப்புகளை
அடிக்கடி சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவது
தடுக்கப்படுகிறது.
தலைமுடி ஆரோக்கியம் பாதுகாக்கபடும்
வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான
கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது. இப்பருப்புகளை தொடர்ந்து
உண்ணும் ஆண்களுக்கு தலையில் வழுக்கை ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
வால்நட் பருப்பில் இருக்கும் இயற்கையான ரசாயனங்கள் உடலில்
நோயெதிர்ப்பு சக்தியை அதிகபடுத்தி, உடலை பல வகையான நோய் தொற்றுகளிலிருந்து காக்கிறது. உடலில்
இருக்கும் வைரஸ்களையும் அழிக்கின்றது.
தோல் சுருக்கம் ஏற்படாது
நமது உடலின் வெளிப்புற பகுதியான தோல் சிறிது ஈரப்பதத்தோடு
இருப்பது ஆரோக்கியமானது. வால்நட்ஸ் பருப்புகள் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு
தோலின் ஈரப்பதம் வறண்டு போகாமல் பாதுகாக்கப்படுகிறது. தோல் சுருக்கங்களும்
தடுக்கப்படுகிறது. இதனால் இளம்வயதிலேயே தோன்றும் முதுமை தோற்றம் தடுக்கபடுகிறது.
வலிப்பு நோய் குணமாகும்
ஒரு சிலருக்கு பிறக்கும் போதே ஏற்படும் நரம்பு பிரச்சனைகளால்
வலிப்பு நோய் ஏற்படுகிறது. இந்த நோயை முற்றிலும் குணமாக்கும் மருந்துகள் மிகவும்
குறைவு. வால்நட்ஸ் பருப்புகளை இந்த பாதிப்பு கொண்டவர்கள் உண்பது வலிப்பு
நோயிலிருந்து நிவாரணம் அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.