நிலக்கடலை, வேர்கடலை
நிலக்கடலை ஃபேபேசீஸ் என்னும் தாவர குடும்பத்தை சேர்ந்தது. நிலகடலையானது வேர்கடலை, மல்லாட்டை, கச்சான் என
பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகிறது. நிலக்கடலை தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக்
கொண்டது. இன்று நிலக்கடலை உலகில் பல்வேறு நாடுகளில் பயிரிடப்படுகிறது.
வேர்க்கடலை அதன் சாப்பிடக் கூடிய விதைகளுக்காக முக்கியமாக
பயிரிடப்படுகிறது. மற்ற பருப்பு தாவரங்களை போலல்லாமல், வேர்கடலையானது நிலத்திற்கு
மேல் அல்லாமல் நிலத்திற்கு கீழ் வளரும்
ஒரு தாவரம் ஆகும்.
நிலகடலையில் அடங்கியுள்ள சத்துக்கள்
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.கார்போஹைட்ரேட் - 21 மி.கி.
நார்சத்து - 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம் - 25 மி.கி.
ட்ரிப்டோபான் - 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின் - 1.512 கி
விட்டமின் - பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
சுண்ணாம்புச்சத்து – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.
வேர்கடலையில் புரதங்கள், எண்ணெய் மற்றும் நார்ச்சத்துகள் அதிக அளவில் இருக்கிறது.
எனவே நாவின் சுவை மொட்டுகளுடன் சேர்த்து நம் உடலுக்கும் வேர்கடலை ஒரு விருந்து
ஆகும்.
நாம் பொதுவாக விலை அதிகம் கொண்ட பருப்பு வகைகளான பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்புகளில்தான்
சத்து அதிகம் உள்ளது என்று நினைக்கிறோம். ஆனால், விலை மலிவான
எளிதில் கிடைக்ககூடிய நிலக்கடலையில்தான் இவற்றையெல்லாம் விட சத்துக்கள் உள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குத்தான் உண்டு.
அதனால்தான் இது "ஏழைகளின் முந்திரி' என்று
அழைக்கப்படுகிறது.
நிலக்கடலையின் மகத்துவம்
நிலக்கடலையானது தென்னிந்தியர்களின் உணவில் இரண்டற
கலந்துவிட்ட உணவு வகைகளில் ஒன்று. நிலக்கடலை பலவிதமான உணவு வகைகளிலும், பதார்த்தங்களிலும்
பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பெரும்பலனோர்க்கு அதன்
மருத்துவக் குணங்கள் வெளியில் தெரிவதில்லை.
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும்
வயலில், காய் பிடிக்கும் காய்க்கும் பருவம்
வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால், நிலக்கடலை செடியில்
காய் பிடித்தால் எலிகள் அளவு கடந்து குட்டி போடுவதைக் காணலாம். இதனால் வயலில்
எலிகள் தொல்லை அதிகமாகும். இதற்க்கு நிலக்கடலையில் உள்ள "போலிக் ஆசிட்'
தான் காரணம். இந்த சத்து நிலடலையில் அதிகம் இருப்பதால் இது
இனப்பெருக்கத்திற்கு உதவுகிறது. நிலக்கடலைச் செடியைச் சாப்பிடும் ஆடு, மாடு, நாய் வயல்வெளியைச் சுற்றி உள்ள பறவைகள்
எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவதைக் காணலாம்.
நிலகடலையில் எண்ணெய் உற்பத்தியைத் தவிர, வெண்ணெய், இனிப்பு தின்பண்டம், வறுத்த வேர்க்கடலை, சிற்றுண்டி பொருட்கள், சூப்கள் மற்றும் சாலட்
தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
நிலக்கடலையின் மருத்துவ பயன்கள்
கர்ப்பப்பையை வலுபடுத்தும்
நிலக்கடலையில் போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம்,
பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராகச் செயல்படுவதுடன்
கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாது. அது
மட்டுமல்லாது குழந்தைப்பேறும் சிரமமின்றி உண்டாகும். பெண்களின் ஹார்மோன்
வளர்ச்சியை இது சீராக்குகிறது. இதனால், அவர்களுக்கு மார்பகக்
கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது. பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து
சாப்பிட்டுவந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
இதய நோய்கள் வராமல் தடுக்கும்
உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்
நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து
நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது. இதய நோய்கள் ஏற்படுவதையும்
தடுக்கிறது.
மூளையை சுறுசுறுபாக்கும்
நிலக்கடலையில் ‘பரிப்டோபான்’ என்ற அமினோ அமிலம்
நிறைந்துள்ளது. இது செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப்பொருள்
உற்பத்தி செய்ய பயன்படுகிறது. செரட்டோனின் மூளையில் உள்ள நரம்புகளைத் தூண்டுகிறது.
மன அழுத்தத்தைப் போக்குகிறது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்குப் உதவும் விட்டமின்,
நியாசின் உள்ளது. இது ஞாபக சக்திக்கும் பெரிதும் உதவும். இரத்த ஓட்டத்தையும்
சீராக்குகிறது.
கெட்ட கொழுப்பை குறைக்கும்
வேர்க்கடலைகள் ரெஸ்வெராட்ரோல், பீனாலிக் அமிலங்கள், ஃபிளாவோனாய்டுகள் மற்றும் பைட்டோஸ்டெரோல்கள் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன.
இது நம் உணவில் இருந்து கெட்ட கொழுப்பு
உறிஞ்சப்படுவதைத் தடுக்க உதவுகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
நீரழிவு நோய் ஏற்படாமல் தடுக்கும்
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ்
சத்து கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில்
இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. பித்தப் பை கல்லைக்
கரைக்கும், நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு
தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். நீரிழிவு
நோய் ஏற்படாமல் தடுக்கும்.
இளமையை பராமரிக்கும்
இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
நிலக்கடலை நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் தக்கவைக்க
உதவுகிறது. நிலக்கடலை சாப்பிட்டால் உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்ற கருத்து
நிலவுகிறது. ஆனால், அது உண்மையில்லை. நிலக்கடலையில் உள்ள துத்தநாகம் மற்றும் தாமிரச் சத்து,
நமது உடலில் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும்
கொழுப்பை அதிகமாக்குகிறது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்து,
நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இன்னும் எண்ணிலடங்க நன்மைகளை நிலக்கடலை தன்னகத்தே
கொண்டுள்ளது. அளவோடு நிலக்கடலையை சாப்பிடுவோம், ஆரோக்கியமாக வாழ்வோம்.