-->

மசூர் பருப்பின் நன்மைகள் மற்றும் பயன்கள்


மைசூர் பருப்பு

மசூர் பருப்பு அல்லது மைசூர் பருப்பு என்பது ஒருவகைப் பருப்பு ஆகும். இது தென்னிந்திய சமையலில் பெரிதும் பயன்படுகிறது. இதில் அதிக புரதச் சத்து உண்டு. இந்தியா, கனடா, துருக்கி ஆகிய நாடுகளில் இது அதிகளவில் பயிரிடபடுகின்றது. ஆனால் இது கனடா நாட்டில் தான் அதிகம் பயிரிடப்படுகின்றது. ஆரம்பத்தில் இந்தியாவில்தான் அதிகளவில் உற்பத்தியாக்கப்பட்டது. ஆனால் 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர், கனடாவில் தான் அதிக அளவில் உற்பத்தி செய்யபடுகின்றது.

மைசூர் பருப்பு பயன்கள்


மைசூர் பருப்பின் சிறப்பு என்னவென்றால், அதில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், அது உடலில் உள்ள பித்தக்கற்களை வெளியேற்றிவிடும். மேலும் ஃப்ளேவோன்ஸை அதிகம் கொண்டதால், புற்றுநோய் தாக்கத்தில் இருந்தும் காப்பாற்றும். அதுமட்டுமின்றி, இது உடலில் இரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்லும்.

மசூர் பருப்பு உடலுக்கு கேடு விளைவிக்ககூடியது என நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் மசூர் பருப்பு உடலுக்கு நன்மை விளைவிக்கக்கூடியது. கேசரி பருப்பு என்றொரு பருப்பு வகை இருக்கிறது. அது பார்பதற்கு அச்சு அசல் மசூர் பருப்பு போன்றே இருக்கும். அந்த பருப்பு வகை தான் உடலுக்கு நல்லதல்ல. இந்த கேசரி பருப்பை மசூர் பருப்புடன் கலப்பதால் தான் மசூர் பருப்பு நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது.

மசூர் பருப்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

இரும்பு, புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, பி 6, பி 2, ஃபோலிக் அமிலம், கால்சியம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் மற்றும் தாதுக்கள் போன்றவை மசூர் பருப்பில் அதிகம் உள்ளது. ஒரு கப் மசூர் பருப்பில் உங்களுக்கு 14 கிராம் புரதம், 8 கிராம் உணவு நார், 44.5 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 6 மி.கி இரும்புசத்து போன்றவை இருக்கிறது. இந்த பருப்பை அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால் இதில் உள்ள நார்சத்து காரணமாக உடல் எடை குறையும்.

நீரிழிவு நோயை கட்டுபடுத்தும்

மசூர் பருப்பு உணவு செரிமானம் ஆகும் நேரத்தை தாமதப்படுத்துகிறது மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. இந்த பருப்பை அடிகடி உணவில் சேர்ப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை கணிசமாக கட்டுப்படுத்த உதவுகிறது.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

மசூர் பருப்பில் உள்ள சக்திவாய்ந்த அண்டிஅக்சிடேன்டுகள் தோலில் உள்ள திசுக்களின் சேதத்தை எதிர்த்து போரிட்டு, வயதான தோற்றம் ஏற்படுவதில் இருந்து நம்மை காக்கிறது. மேலும் மசூர் பருப்பை மஞ்சள் மற்றும் தேன் கலந்து முகம் மற்றும் சருமத்திற்கு தடவினால் சருமம் மிருதுவாகவும், தோலில் உள்ள கரும் புள்ளிகளை அகற்றவும் உதவுகிறது.

மசூர் பருப்பின் பயன்கள்


எடையை பராமரிக்கிறது

மசூர் பருப்பு உணவில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும், இயற்கையாகவே உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. மசூர் பருப்பில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை  மெதுவாக்குகின்றன. இதனால் அதிகம் சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் தவிர்க்கபடுகிறது. மேலும் கலோரி அளவைக் குறைக்கிறது மற்றும் எடை குறைப்பிற்கு உதவுகிறது.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

மசூர் பருப்பில் உள்ள நார்ச்சத்துகள் மலச்சிக்கல், வீக்கம் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை தீர்க்கிறது. மேலும், மசூர் பருப்பு வயிற்றுப் புண், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

எலும்புகளை பலப்படுத்துகிறது

மசூர் பருப்பில் உள்ள குறிப்பிடத்தக்க அளவு கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் எலும்புகளில் ஏற்படும் காயங்கள், எலும்பு முறிவுகள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற அபாயங்கள் ஏற்படுவதை குறைக்கிறது.

Previous Post Next Post