-->

புன்னை எண்ணெய் மருத்துவ பயன்கள்


புன்னை மரம்

புன்னை மரமானது பண்டைய காலத்தொட்டே தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் இணைந்து இருக்கக்கூடிய ஒரு பழமையான மரமாகும். இந்த புன்னை மரத்தின் முக்கியத்துவத்தை அறிந்த நம் முன்னோர்கள் கோயில்களின் முற்றத்தில் இம்மரத்தை வளர்ப்பதை பாரம்பரியமாகக் கொண்டிருந்தனர். இது ‘புங்க மரம்’ என்னும் பெயராலும் அழைக்கபடுகிறது.

புங்க எண்ணெய் நன்மைகள்


இம்மரத்தின் விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த எண்ணையை கோயில்களில் தீபம் ஏற்றப்படும் எண்ணெய்யாகவும் பயன்படுத்தி வருகின்றனர். புன்னை எண்ணை ஆங்கிலத்தில் ‘Tamunu oil’ என அழைக்கபடுகிறது.

புங்க மர விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய் வாத வியாதிகளுக்கும், மூட்டு வலிக்கும் இந்திய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் எண்ணெயை விளக்கு எரிக்க பயன்படுத்தினார்கள். தற்போது இதை பயோடீசல் தயார் செய்து டீசலுக்குப் பதிலாகப் பயன்படுத்துகிறார்கள்.

புன்னை எண்ணெய் பயன்கள்

1. குழந்தைகளின் பல்வேறு நோய்களுக்கு புங்க எண்ணெய் சிறந்த வீட்டு மருந்தாகப் பயன்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறுகள், இருமல், சளி, பேதி, பசியின்மை போன்றவற்றைப் போக்கும்.

2. புங்க எண்ணெய் சரும நோய்களையும் தீர்க்கக் கூடியது. இந்த எண்ணெய் மூல உபத்திரத்திற்கு சிறந்த மருந்தாகும். மார்புச் சளி, தீர இருமலுக்கு புங்க எண்ணெய் பயன்படுகிறது. சரும நோய்களுக்கும், ஆறாத புண்களுக்கும், கீழ்வாதத்திற்கும் புங்க எண்ணெய் பயன்படுகிறது. புங்க எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதுடன், பளபளக்கச் செய்யும்.

3. தினமும் உடலில் புங்க எண்ணெயைத் தடவி வந்தால் சரும நோய்கள் ஏற்படாது. புங்க எண்ணெய்யை பயன்படுத்தி சோரியாஸிஸ்சுக்கான மருந்து தயாரிக்கப்படுகிறது.

4. புங்க எண்ணெய் ஆஸ்துமா, நெஞ்சுக் கோளாறுகளுக்கு மருந்தாகிறது. புங்க எண்ணெய்யை நெஞ்சின் மீது பூசுவதால் நெஞ்சு சளி, இருமல் குறைகிறது. தலையில் பொடுகு இருந்தால் இதை தடவி பத்து நிமிடம் கழித்து குளித்தால், அரிப்பு சரியாகும்.

5. புன்னை எண்ணெய் அனைத்து முடிப் பராமரிப்பு எண்ணெய்களிலும் பெரும்பாலும் சேர்கபடுகிறது. புன்னை எண்ணெய் முடிஇழப்பைச் சரிசெய்யவும், புதிய முடிவளர்ச்சிக்கும் உதவி புரிகிறது. முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர இந்த எண்ணெய் உதவுகிறது.

6. இயற்கையாகவே புன்னை எண்ணெய் பூஞ்சை எதிர்ப்பானாகச் செயல்படுவதால் விளையாட்டு வீரர்களுக்கு காலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாக உபயோகபடுத்தப்படுகிறது.

7. நகச்சுற்று ஏற்படுத்தும் பூஞ்சைகளுக்கு எதிராக புன்னை எண்ணெய் சிறப்பான பலனை தருகிறது.

8.  சொரியாஸிஸை குணப்படுத்துவதில் புன்னை எண்ணெய் சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

9. புன்னை மரத்து இலைகளை அரைத்து, நெற்றியில் பற்று போல தடவி வர, ஒற்றைத் தலைவலி மற்றும் தலைச் சுற்றல் போன்ற பாதிப்புகள் விலகும்.

10. புன்னை பூவை நிழலில் உலர்த்தித் தூள் செய்து ஒரு சிட்டிகை காலை, மாலை கொடுத்து வர டைபாய்டு தீரும்.

11. புன்னை எண்ணெய் தீக்காயங்களை ஆற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது.

12. முகச்சுருக்கங்களை நீக்குவதிலும் வரவிடாமல் தடுப்பதிலும் புன்னை எண்ணெய் சிறந்த பலன் தரும்.

13. செல்ல பிராணிகளுக்கு ஏற்படும் அரிப்பு மற்றும் புண்களுக்கு புன்னை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. மேலும் விலங்குகளுக்குப் பளபளப்பையும், ரோமத்தை அழகாக்கவும் இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

14. படர்தாமரையைக் குணப்படுத்த இந்த எண்ணெய் உதவுகிறது.

15. உடல் அரிப்பை, வறண்ட சருமத்தை மாற்றவும், நீக்கவும், சொறி, சிரங்கு வியாதிகளைக் குணப்படுத்தவும் புன்னை எண்ணெய் பயன்படுகிறது.

16. புன்னை எண்ணெய் உதட்டு வெடிப்புகளைத் தீர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இத்தனை அரிய நற்பலன்களை கொண்ட புன்னை எண்ணை, வெறுமனே, மோட்டார் பம்ப்செட்களில் மாற்று எரிபொருளாக மட்டும் பயன்பட வில்லை. அவை, மனிதரின் உடல் நல பாதிப்புகளுக்கு, உட்கொள்ளும் மருந்தாகவும், சமையலில் கடலை எண்ணைக்கு மாற்றாகவும் பயன்படுத்தப்பட்டு, உடல் நலத்தைக் காக்கும் ஆற்றல் மிக்க எண்ணையாக திகழ்கிறது.
Previous Post Next Post