முந்திரி
முந்திரி அல்லது மரமுந்திரி என்பது ‘Anacardiaceae’
குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரம் ஆகும். முந்திரி கொட்டைகள் பச்சையாகவோ வறுக்கப்பட்டோ
சாப்பிடபடுவதுடன், கறி சமைக்கவும், ருசியைச்
சேர்ப்பதற்காக வேறு உணவுகளுடன் சேர்க்கப்பட்டும் பயன்படுத்தப்படுகின்றது.
முந்திரி பழம்
முந்திரியில் முந்திரிப்பழமென நாம் நினைப்பது
உண்மையில் பழமல்ல. அது போலிப்பழம் என அழைக்கப்படும். இது பூவின் சூலகப் பகுதியில்
இருந்து உருவாவதில்லை. பூவின் அடிப்பகுதியில் உள்ள தடித்த பூக்காம்புப் பகுதியே
இவ்வாறு பேரிக்காய் உருவத்தில் வளர்ச்சியடைகிறது. இது ‘முந்திரி ஆப்பிள்’ என அழைக்கபடுகிறது.
முந்திரியில், முந்திரி
ஆப்பிளின் அடியில் சிறுநீரக வடிவில் வளரும் அமைப்பே உண்மையான பழம் ஆகும். இது
உண்மையான பழமாக இருந்தபோதிலும், இது ‘முந்திரிக்கொட்டை’ என
அழைக்கப்படுகின்றது. அதாவது முந்திரியின் உண்மைப்பழமானது ஒரு விதையைக் கொண்ட
பழமாகும்.
இந்த முந்திரி கொட்டையை ‘கப்பல் வித்தான்
கொட்டை’ என்றும் கூறுவர். முற்காலத்தில் வணிகத்திற்காக நம் நாட்டிற்க்கு வந்த வெளி
நாட்டினர் இந்த முந்திரி பருப்பின் சுவையால் ஈர்க்கப் பட்டு தாங்கள் வந்த கப்பலை
விற்று இதை உண்டதாக கூறுவர்கள். போலிப் பழத்திற்கு வெளியே, சிறுநீரக
வடிவில் காணப்படும் உண்மைப்பழமானது கடினமான ஒரு வெளி உறையையும், உள்ளே ஒரு விதையையும் கொண்டிருக்கும். அந்த விதையே பொது வழக்கில் ‘முந்திரிக்கொட்டை’
அல்லது முந்திரி பருப்பு என அழைக்கப்படுகிறது.
முந்திரி பருப்பு
சுவை அதிகம் கொண்ட பருப்பு வகைகளில்
முந்திரி பருப்புக்கென்று ஒரு தனி இடம் உண்டு. உணவு பொருட்களில் முதன்மையான இடத்தை
பிடித்திருப்பது முந்திரி பருப்பு. ஏனெனில் முந்திரி பருப்பு சேர்க்கபட்டு
செய்யப்படும் உணவு பொருட்கள் தனி சுவையுடன் இருக்கும்.
முந்திரி பருப்பில் உள்ள சத்துக்கள்
முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. மேலும் உடலுக்கு
தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமச்சத்து, இரும்புசத்து,
செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம்,
மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
முந்திரி பருப்பின் பயன்கள்
புற்று நோயை தடுக்கும்
முந்திரி பருப்பில் உள்ள தாவர ஊட்டச்சத்துகளும், புரதங்களும்
புற்றுநோய் வராமல் தடுக்கும். தினசரி சிறது முந்திரிப் பருப்பைச்
சாப்பிட்டுவந்தால், ரத்தஅழுத்தம் சீராக இருக்கும், மேலும் சிறுநீரக கற்கள் உருவாவதைத்
தடுக்கலாம். செல்கள் முதிர்ச்சி அடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.
கொலஸ்டிராலை குறைக்கிறது
முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய
கொலஸ்ட்ரோல் அதிகளவு உள்ளது. மேலும் உடலுக்கு தீமை விளைவிக்ககூடிய கெட்ட கொலஸ்டிராலை
குறைத்து நன்மை தரக்கூடிய நல்ல கொலஸ்டிராலை அதிரிக்க செய்கிறது.
செரிமானம் சீராகும்
முந்திரி பருப்பு சாப்பிடுவதன் மூலம் செரிமான பிரச்சனைகள்
ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் உயிரணு உற்பத்தி, ஜீரணம் ஆகியவை மேம்படுகிறது.
எலும்புகள் வலிமையாகும்
முந்திரி பருப்பை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் கால்சியம், மற்றும் மக்னீசியம் சத்துகளின்
அளவு உடலில் அதிகரிக்கும். இந்த சத்துக்கள்தான் நரம்புகள் மட்டுமன்றி எலும்புகளின்
வளர்ச்சிக்கும் தேவையானதாக இருக்கிறது. மக்னீசியம் சத்துதான் எலும்புகள்
கால்சியத்தை உறிஞ்ச உதவி புரிகிறது. முந்திரி பருப்பை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம்
எலும்புகள் வலிமையாகும்.
நரைமுடி பிரச்சனை தீரும்
முன்பெல்லாம் வயதானால் தான் முடி நரைக்கும். ஆனால் இப்போதோ
இளம் வயதினருக்கு கூட முடி நரைக்க ஆரம்பிக்கிறது. நரைமுடியை வராமல் தடுக்க
முந்திரி பருப்பை எடுத்துகொள்ள வேண்டும். ஏனெனில் முந்திரி பருப்பில் காப்பர்
எனும் செம்பு சத்து உள்ளது. இது முடியின் கருமை நிறத்தைப் பாதுகாத்து.முடி
விரைவில் நரைக்காமல் தடுக்கிறது.
இரத்த அழுத்தம் கட்டுபாட்டில் இருக்கும்
இப்போதெல்லாம் வயது வித்தியாசம் இல்லாமல் எல்லாருக்கும்
ரத்த அழுத்த பிரச்சனை உள்ளது. ரத்த அழுத்தம் ஏற்பட தற்போதுள்ள வாழ்க்கை சுழலும்
ஒரு காரணம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க முந்திரி உதவுகிறது. ஏனெனில்
முந்திரியில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்கும்
நம்முடைய இன்றைய நவீன உணவு முறைகளால் சிறுநீரகங்கள்
பாதிப்படைகின்றன. சிறுநீரகம் பாதிக்கபட்டால் அது உடலில் பல்வேறு பாதிப்புகளை
ஏற்படுத்தும். தினமும் முந்திரி பருப்பை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களில்
சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படும்.