-->

பாசிபருப்பின் மருத்துவ பயன்கள் மற்றும் நன்மைகள்


பாசிப்பருப்பு, சிறுபருப்பு

பாசிப்பயறு  என்பது பருப்பு வகையைச் சேர்ந்த ஒரு வகை தாவரம் ஆகும். இது பச்சைப்பயறு,  சிறுபயறு, சிறுபருப்பு, பயத்தம்பருப்பு எனவும் அழைப்படுகிறது. ஆங்கிலத்தில் இது ‘Moong Dhal’ என அழைக்கப்படும். இந்த பருப்பு பண்டைய காலம் முதலே இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வருகிறது.


பச்சைபயறு நன்மைகள்

பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது.

இதில் 24% புரோட்டின் உள்ளது. 63% கார்பொஹைட்ரெட் உள்ளது. இதில் அதிக அளவு கால்சியமும் பாஸ்பரசும் அடங்கியுள்ளது. பாசிப்பயிறு கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவாகும். இதனால் கருவில் உள்ள குழந்தைக்கு செல்லும் உணவு ஊட்டச்சத்துள்ளதாக இருக்கும்.

பாசிப்பயறு இரண்டு விதமாகப் பயிரிடப்படுகின்றது. புஞ்சைத் தானியமாகப் புஞ்சைக் காடுகளில் விளைவது ஒருவகை. நஞ்சை நிலங்களில் நெல் விளைந்த பின் ஓய்வு நாள்களில் விளைச்சல் பெறுவது மற்றொரு வகை. இந்த பயறு துவர்ப்புடன் கூடிய இனிப்புச் சுவையும், வீரியமுள்ளதுமாகும். நல்ல ருசி உடையது. பசியைத் தூண்டி எளிதில் செரிமானமாகக் கூடியது. இரத்தத்தில் மலம் அதிகமாகத் தங்காமல் வெளியேறிவிடும். ஆகவே இரத்தம் கெட்டு நோய்கள் ஏற்படுவதை இது குணப்படுத்தும். சிறுநீர் தேவையான அளவில் பெருகவும், வெளியேறவும் இது உதவும். கபமோ, பித்தமோ அதிகமாகாமல் உடலை ஒரே சீராகப் பாதுகாக்கும்.


சிறுபருப்பு நன்மைகள்

பாசிப்பருப்பு பயன்கள்

1. முலைகட்டிய பாசிப்பருப்பு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் அளவு அதிகரிக்கும்.

2. பாசிப்பருப்பை அரைத்து உடலுக்கு தேய்த்து குளித்து வந்தால் சருமம் பொலிவு பெறும். தலைக்கு தேய்த்து குளித்து வருவதால் பொடுகு தொல்லை இருக்காது.

3. பாசிப்பருப்பை கீரைகளோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடையும். இதனால் உடல் வெப்பம் சீராகும். இதனால் மூல நோய்கள் குணமாகும்.

3. புளியங்கொளுந்துடன் பாசிப்பருப்பை சேர்த்து கடைந்து உணவாக உட்கொள்வதன் மூலம் உடலுக்கு பலம் உண்டாகும்.

4. பாசிப்பருப்பில் செய்த பொங்கலை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் மற்றும் பித்தம் குணமாகும்.

5. பாசிப்பருப்பினை உணவுடன் சேர்த்து வந்தால் உடல் பருமன் கட்டுக்குள் இருக்கும். மேலும் இந்த பருப்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதால் நோய் தாக்கும் அபாயம் குறைவு.

6. குழந்தைகளுக்கு பாசிபருப்பை நன்றாக வேகவைத்து, கடைந்து அதனுடன் நெய் சேர்த்து கொடுத்து வந்தால் குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்கும்.

7. இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு பாசிப்பயிறு ஒரு சிறந்த உணவாகும். தினமும் இதை உணவில் சேர்த்துக் கொள்வதால் இரத்தச்சோகை நோய் ஏற்படாது.

8. கால்சிய சத்து குறைபாட்டுக்கு இது நல்ல உணவாகும். ஆஸ்டியோபோரோசிஸ்எனும் எலும்பு நோய் உள்ளவர்கள் பாசிப்பருப்பை உணவுடன் எடுத்துக்கொண்டால் நோய் எளிதில் குணமாகும்.

9. பச்சைப் பயிரை வேக வைத்து கடுகு, சின்ன வெங்காயம், தாளித்து உப்பு சேர்த்து சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள கூட்டாகவும் உபயோகிக்கலாம். இது மிகவும் சத்தானது.

10. கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு.

11. மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

12. குளிக்கும்போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.
Previous Post Next Post