-->

பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்


பிஸ்தா

சமுதாயத்தில் சக்தி வாய்ந்தவர்களாக தங்களை காட்டிக்கொள்பவர்களை, `அவர் என்ன அவ்வளவு பெரிய பிஸ்தாவா?’ என்று கேட்கும் வழக்கம் நம்மிடம் இன்றளவும் உள்ளது. இந்த பிஸ்தாவை விட, பருப்பு வகையைச் சேர்ந்த பிஸ்தாவுக்கு சக்தி நிறையவே உள்ளது.

பிஸ்தா மருத்துவ நன்மைகள்


பிஸ்தாவின் வரலாறு

கி.மு.7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் இந்த பிஸ்தா மரத்தை பயிரிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாண பகுதிகளில் 1903 முதல் இந்த மரங்கள் அதிக அளவில் பயிர் செய்யபட்டன. உலகிலேயே இங்குதான் அதிக அளவில் பிஸ்தா உற்பத்தி செய்யபடுகிறது.

சீனர்கள் பிஸ்தா பருப்பை `மகிழ்ச்சியான பருப்புஎன்று அழைக்கிறார்கள். பிஸ்தா பருப்பு அதன் கொட்டையை அதுவாய் திறந்து பல்தெரிய சிரிப்பதுபோல் காணப்படுவதால் இந்த பெயரை அவர்கள் சூட்டியுள்ளனர்.

சீனர்களின் ஒவ்வொரு புத்தாண்டின் போதும் இந்த பிஸ்தா பருப்புகளை அனைவருக்கும் வழங்கி மகிழ்கிறார்கள். பிஸ்தாவை அவர்கள் ஆரோக்கியம், சந்தோஷம், ராசியான எதிர்காலம் ஆகியவற்றின் சின்னமாக கருதுவதுதான் இதற்கு காரணம்.

இந்தியாவில் பிஸ்தாவை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. இந்தியாவில் பிஸ்தாவை பருப்பாக சாப்பிடாவிட்டாலும், கேசர் பிஸ்தா சர்பத், ஐஸ் கிரீம், பிஸ்தா குல்பி ஆகியவற்றில் பிஸ்தா பயன்படுத்தபடுகிறது.

பிஸ்தாவில் அடங்கியுள்ள சத்துக்கள்

மத்திய கிழக்கு பகுதியில் முதன் முதலாக கண்டுபிடிக்கபட்ட பிஸ்தா மரம், உலகின் மிக பழமையான பருப்பு வகை மரங்களுள் ஒன்றாகும். சிறிய முடப்பட்ட ஓட்டிற்குள் பச்சை நிறத்தில் காணப்படும் பிஸ்தாவை `பிஸ்தாச்சியோஎன்று உலக அளவில் அழைக்கிறார்கள். பிஸ்தாவில் 30 வகையான வைட்டமின்கள், மினரல்கள், பைடோ ஊட்டச்சத்துகள் உள்ளிட்ட பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன.

28 கிராம் கொண்ட பிஸ்தா பருப்பில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் மாங்கனீஸ் அதிக அளவு உள்ளன. பிஸ்தா பருப்பில் மிக அதிகமாக ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை எல்லாமே மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை தரும். ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிகின்றன. பிஸ்தா பருப்பு இதயத்திற்கு நன்மை செய்யும் கொழுப்பை கொண்டிருப்பதால் பல்வேறு இதயம் சம்பந்தமான வியாதிகளை தடுக்கும் தன்மை கொண்டது. பிஸ்தா பருப்பு இதய நோய்கள் வருவதை 12% வரை குறைக்கும்.

பிஸ்தாவின் மருத்துவ பயன்கள்

1. மன அழுத்தத்தினால் வரும் இரத்தக் கொதிப்பை பிஸ்தா பருப்பு கட்டுப்படுத்துகிறது. மேலும் இரத்த குழாய்களை விரிவடைய செய்து, நல்ல  இரத்த ஓட்டத்தை சீராக்கி அதிக இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

2. பிஸ்தா சாப்பிட்டதும் உடலில் க்ளுகோஸ் மற்றும் இன்சுலின் அளவு குறைவாக இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளது. இது பெப்டைட் 1 என்னும்  ஹார்மோன் அளவை அதிகரித்து உடலில் உள்ள க்ளுகோஸின் அளவை சீராக்குகிறது.

3. பிஸ்தாவில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீர் செய்து மலச்சிக்கலை தடுக்கிறது, மற்றும் குடலில் நல்ல பாக்டீரியா வளர்வதற்கு உதவி செய்கிறது. குடலில் உள்ள பாக்டீரியாக்கள் இந்த நார்ச்சத்தை நொதிக்கச்செய்து மற்றும் பல நன்மைகளை கொண்ட கொழுப்பு அமிலங்களை  உற்பத்தி செய்கிறது.

4. பிஸ்தா பருப்பில் உள்ள துத்தநாகம் உடலின் நோயெதிர்ப்புத் சக்தியை அதிகரிக்கிறது.

பிஸ்தா பருப்பின் பயன்கள்


5. பிஸ்தா பருப்பை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது கர்ப்பிணிகளின் உடலுக்குத் தேவையான மற்றும் முக்கியமான பல ஊட்டச்சத்துக்களைக் தருகிறது.

6. பிஸ்தாவில் அதிக அளவில் வைட்டமின்கள் உள்ளது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. மேலும் இது, செல்களுக்கு தேவையான ஆக்சிஜனையும் கொடுக்கிறது.

7. பிஸ்தா பருப்பில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது, இரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் ரத்தத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை ரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரைப் பராமரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

8. பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட்டு வந்தால் நியாபகச் சக்தி அதிகரிக்கும்.

9. பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ ஆனது, புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் வராமல் இருக்கவும் உதவுகிறது.
 
10. பிஸ்தாவில் உள்ள சியாசாந்த், லூட்டின் ஆகிய இரு கரோட்டின்கள் காணப்படுகின்றன. இவை கண்ணின் விழித்திரையைப் பாதுகாத்து, தெளிவான பார்வைக்கு  வழிவகுக்கின்றன. மேலும் கண்புரை நோய் வராமல் காக்கிறது.

11. பிஸ்தாவானது உடலில் உள்ள கெட்ட எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கும், மற்றும் ஆரோக்கியம் தரும் எச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கும். டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதில் இருந்து பிஸ்தா நம்மை காக்கிறது. ஒரு கப் பிஸ்தா பருப்பில் 60 சதவீதம் மினரல், மற்றும் பாஸ்பரஸ் இருக்கிறது.

12. ஆண் மற்றும் பெண்களின் இனப்பெருக்க ஹார்மோன்களின் குறைபாட்டை நீக்கி, பாலுறவில் ஈடுபடுவதற்கு ஏற்ற உடற் தகுதியையும், மனப்புத்துணர்ச்சியையும் தருகிறது.

13. பிஸ்தா பருப்பை லேசாக வறுத்து, கற்கண்டு சேர்த்த பாலுடன் கலந்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் உடல் வலுவடையும்.

Previous Post Next Post