-->

உடைத்தகடலை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்


பொட்டுக்கடலை, உடைத்தகடலை

தென் இந்தியாவில் மட்டுமல்ல, வட இந்தியவிலும் அதிகம் உபயோகிக்கும் முழுப் பயறுகளில் முக்கியமானது கொண்டைக்கடலை. கொண்டைகடலையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று வெள்ளை மற்றொன்று கருப்பு. இதில் வெள்ளையாக உள்ளது ஹிந்தியில் சன்னா(Channa) என்றும், ஆங்கிலத்தில் பெங்கால் கிராம்  (Bengal Gram) என்றும் அழைக்கப்படுகிறது. இந்து மேற்கு வங்கத்தில் அதிகம் விளைகிறது.

கொண்டைகடலை உலர வைக்கப்பட்டு கிடைப்பதிலேயே பல வகைகள் உள்ளது. இது சிறியதாக பச்சை நிறத்திலும் பிரவுன் நிறத்திலும் கிடைக்கிறது. இதை  நாம் சுண்டல் செய்ய பயன்படுத்துகிறோம். பிரவுன் நிறத்தில், கொஞ்சம் அளவில் பெரியதாகவும் இருக்கும். அளவில் அதைவிட பெரியதாக வெள்ளையாக இருப்பதை காபூலி சன்னாஎன்று அழைக்கிறோம். பிரவுன் கொண்டைக்கடலையை தோல் நீக்கி, உலர வைத்து கடலைப் பருப்பாக தினசரி சமையலில் உபயோகிக்கிறோம். இதை அரைத்து  மாவாக்கி, கடலை மாவாக பஜ்ஜி உள்பட பல பண்டங்களில் உபயோகிக்கிறோம். இந்தக் கடலையை தோலுடன் உப்பு நீர் தெளித்து வறுத்து உப்புக்கடலையாக சாப்பிடபடுகிறது.

பொட்டுகடலை உருண்டை

பொட்டுக்கடலை

கொண்டைக்கடலையின் தோலை நீக்கி அதை பொட்டுக்கடலை, பொரிகடலை, உடைத்தகடலை என்று பலவாறாக சொல்கிறோம். அதைத்தான் சட்னி முதல்  பலவற்றிலும் உபயோகிக்கிறோம். பொட்டுக்கடலையை தேங்காயுடன் சேர்த்து சட்னியாக சாப்பிடுவது நம் உணவு வழக்கத்தில் இருக்கிறது. உடைத்த கடலையில் உள்ள ஊட்டச்சத்துகள் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளைத் தருகின்றன.  இது லைசின் நிறைந்த சைவ புரதத்தின் மூலமாக இருப்பதால், புரத ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பதில், இது ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. மிகவும் காரமாக, சுவையாக இருப்பதால் இதை கன்  பவுடர்’ (Gun Powder) என்றும் கூறுவர்.

பொட்டுக்கடலை அல்லது உடைத்தகடலையின் ஆரோக்கிய நன்மைகள்

நரம்புகள் பலப்படும்

உடைத்த கடலை பருப்பில் இருக்கும் புரதங்கள் மற்றும் இதர சத்துக்கள் நமது உடலில் நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

உடல் சக்தி மேம்படும்

உடைத்தகடலை பருப்பில் அதிகளவு புரதங்கள் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகம் சாபிடுபவர்களுக்கு உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிக ஆற்றலை தருகிறது. நீண்ட நேரம் கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உடைத்த கடலை பருப்புகளை சிறிது சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும்.

ஜீரண சக்தி அதிகரிக்கும்

நாம் சாப்பிடும் உணவுகளை செரிமானம் செய்ய வயிறு, குடல் போன்ற உறுப்புக்கள் ஆரோக்கியமாகவும், ஆற்றல் மிகுந்ததாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். உடைத்த கடலை பருப்பில் உள்ள எளிதில் ஜீரணம் ஆக கூடிய புரத சத்து மற்றும் நார்ச்சத்து நாம் சாப்பிடும் உணவு நன்கு செரிமானமாக உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வெளியேற்றவும், உள்ளுறுப்புகளை சுத்தம் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.


இதய நலம் மேம்படும்

உலகெங்கிலும் இதயம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொழுப்பில்லாத உணவுகளை அறவே தவிர்த்து, புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் இதய நலம் மேம்படும். புரத சத்து அதிகம் நிறைந்த உடைத்த கடலை பருப்பை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்பட்டு, ஆயுளை அதிகரிக்கும்.

ஆரோக்கியமான வளர்ச்சி

உடைத்த கடலையில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமாகும். நாம் அதிகம் உடைத்த கடலை பருப்புகளை சாப்பிடுவதால் சிறப்பான உடல் வளர்ச்சியினை பெறலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

பருப்பு வகைகள் அனைத்துமே மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துபவையாகவே உள்ளன. உடைத்த கடலை பருப்புகளை அதிகம் உண்பதால் அதிலிருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஜுரம், வைரஸ் தொற்று போன்றவற்றிலிருந்து நம்மை காக்கும்.

சருமம் ஆரோக்கியம் வளரும்

உடைத்த கடலை பருப்பு அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் அவ்வளவு எளிதில் ஏற்படாது. இந்த பருப்பில் நிறைந்திருக்கும் புரதம் மற்றும் இதர சத்துகள் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது. மேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை விரைவாக நீக்கும் தன்மை இந்த உடைத்த கடலை பருப்பிற்கு உண்டு.


Previous Post Next Post