எலுமிச்சை ஏன் ஆன்மீகத்தில் அதிகம் பயன்படுகிறது
எலுமிச்சை
பழத்தை சாஸ்திரங்கள் 'தேவ கனி'
என்று விவரிக்கிறது. அதனால், தான் தாந்த்ரீக
சாஸ்திரத்தில் எலுமிச்சை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மகா சக்தியான ஆதி சக்திக்கு
எலுமிச்சை மாலை கூட போடப்படுகிறது. தீய சக்திகளை துரத்தும் சக்தி எலுமிச்சைக்கு
உண்டு என்பது ஆன்மீக வாதிகள் சிலர் கருத்து.
எலுமிச்சை
ஈசனின் வடிவம் என்றால், அதில் உள்ள
மஞ்சள் சக்தியின் வடிவம். மொத்தத்தில் எலுமிச்சையில் சிவ - சக்தி சங்கமிப்பதாக சொல்லப்படுகிறது.
அதனால் தான் நாம் எங்காவது வெளியில் சென்றாலோ அல்லது வேறு ஏதேனும் பயணம்
மேற்கொண்டாலோ, தீய சக்திகளை அகற்ற உடன் எலுமிச்சையை எடுத்துச் செல்வது நல்லது.
வாகனங்களில் எலுமிச்சை ஏன் கட்டப்படுகிறது
வாகனங்களில்
எலுமிச்சை - மிளகாய் கட்டப்படுவதை பார்த்து உள்ளோம். அது ஏன் என்பது பலருக்கு
தெரியாது. காரணம் கேட்டல் எல்லோரும் சொல்வது திருஷ்டிக்காக கட்டியிருக்கிறேன்
என்பார்கள். உண்மையில் வண்டிகளில்
எலுமிச்சை கட்டுவதற்கு ஆன்மீக ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பல காரணங்கள்
உண்டு.
எலுமிச்சையை வண்டிகளில் கட்டுவதன் ஆன்மீக காரணம்
ஏதேனும்
நல்ல காரியத்திற்கு வண்டியில் செல்லும் போது நமக்கும் வண்டிக்கும் சேர்த்து
எலுமிச்சையை சுற்றி போட்டு, நான்காக வெட்டி நான்கு திசைகளிலும் வீசுகிறார்கள். நான்கு
திசைகளில் இருந்தும் எந்த கெட்ட சக்தியும் நம்மை நெருங்கிவிடக் கூடாது
என்பதற்காகத் தான் நான்கு மூலையிலும் வீசுகிறார்கள். மேலும் வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி
நாட்களிலும் எலுமிச்சை கட்டுகிறார்கள்.
தீய சக்திகளை விரட்ட எலுமிச்சையானது காரில் மட்டும் அல்ல கோயில்களில் கூட, திரி சூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இரு புறங்களிலும் வைக்கப்படுகிறது. கண் திருஷ்டியை நீக்கி பாதுகாப்பை அளிக்க மிளகாயுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.
எலுமிச்சையை வண்டிகளில் கட்டுவதன் விஞ்ஞான காரணம்
எலுமிச்சம் பழத்தில் உள்ள ‘சிட்ரோனிக் அமில்கா’ என்னும் அமிலமானது மிளகாயில் உள்ள ‘பென்னியோசிட்’ என்னும் காரத்துடன் இரசாயனப் மாற்றத்தால், ‘மிதீரியட்’ என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவை வாகனத்தின் பானட்டில் இருந்து ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட் என்னும் கலப்பு மூலகத்திலான உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதி வரை கடத்துகிறது. அந்த வாயுவானது ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பார்த்துக் கொள்கிறது. மேலும், இந்த வாயுவானது மேற்சொன்ன இரசாயனப் மாற்றத்தால் ஒரு வாரம் மட்டுமே கிடைக்கிறது. அதனால் தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் வாகனங்களில் ஏற்கனவே கட்டப்பட்டவை அகற்றப்பட்டு புதிதாக எலுமிச்சை - மிளகாய் கட்டுகிறார்கள்.
வெள்ளிகிழமைகளில் ஏன் எலுமிச்சை கட்டுகிறார்கள்
வெள்ளிக் கிழமை எலுமிச்சையை கட்டுவதற்கும் கூட ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அதன் படி, வெள்ளிக் கிழமையில், பூமியானது சூரியனுக்கும் - சுக்கிரனுக்கும் இடையில் வடமத்திய ரேகையில் கடக்கக் கோட்டுக்கு தெற்கே 5 டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம் நடக்கிறது. அதே சமயத்தில், இதற்குப் பெரிய அளவில் ஆதாரமும் இல்லை. எனினும், ஆன்மீக வாதிகள் இதனை நம்புகின்றனர்.சென்னையில் பாடிகாட் முனீஸ்வரன் என்ற கோயில் உள்ளது. அந்த கோயிலின் முன் அமாவாசை நாட்களில் வரிசையாக வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருப்பதை பார்த்து இருக்கலாம். அங்கு பூசாரி எலும்பிச்சை வைத்து பூஜை போட்டால் அந்த வண்டியில் விபத்து ஏற்படாது என்பது மக்கள் நம்பிக்கை. அதாவது முனீஸ்வரனே தங்களுக்கு பாடிக்காட்டாக வந்து காப்பார் என்று மக்கள் நம்புகின்றனர்.