-->

எப்போது எந்த கடவுளை வணங்க வேண்டும்


எப்போது யாரை வணங்க வேண்டும்


இப்போதுள்ள பரபரப்பான வாழ்க்கை சுழலில் பணம் சம்பாதிக்க எல்லோரும் இயந்திரம் போல ஓடுகிறார்கள். நேரம் காலம் பார்க்காமல் எந்நேரமும் பரபரப்பாகவே காணpபடுகிறார்கள். இப்படி ஓடுகிறவர்களுக்கு கடவுள் பற்றிய நினைப்பே வருவதில்லை. ஆனால் ஒவ்வொரு காரியம் செய்யும்போதும், வெளியே செல்ல நினைக்கும்போதும் குறிப்பிட்ட கடவுளை வணங்கினால் செல்லும் காரியம் ஜெயமாகும். அந்தவகையில் எந்தெந்த காரியத்துக்கு எந்த தெய்வத்தை யார் வணங்குவது சிறப்பு என்பதை பின்வருமாறு பார்ப்போம்,

எந்த கடவுள் எப்போது


1. நீங்கள் வெளிநாடுகளுக்கு செல்வதானால் சந்திரனை சூட்டிய சிவ பெருமானை வழிபட்டுச் செல்லுதல் சிறப்பு.

2. ஜோதிடம் பார்க்க, திருமணம் போன்ற சுப காரியங்கள் சம்பந்தமாக வெளியில் செல்லும் சமயத்தில் விநாயகரை வழி பட்டுச் செல்லுதல் சிறப்பு.

3. பணம் விஷயமாக வெளியில் புறப்பட்டால் மகாலக்ஷ்மியை வணங்கிச் செல்ல வேண்டும்.

4. கல்வி சம்பந்தமாக வெளியில் செல்லும் போது சரஸ்வதி அல்லது ஹயக்ரீவரை வணங்கி விட்டுச் செல்ல வேண்டும்.

5. வெளி ஊர்களுக்கு செல்லும்போது ஏழுமலையானை வணங்கி செல்ல வேண்டும்.

6. வீடு, வாகனம் வாங்க, வாழ்க்கை வசதி மேம்பட போன்ற இது சம்பந்தமான விஷயமாக வெளியில் செல்லும் போது மகாவிஷ்ணுவை வணங்கி செல்ல வேண்டும்.

7. மருத்துவமனை போன்ற இடங்களுக்கு செல்லும் சமயத்தில் வைத்தீஸ்வரன் அல்லது தன்வந்திரி பகவானை வழிபட்டு செல்ல வேண்டும்.
8. வழக்கு, விவகாரம் சம்பந்தமாக வெளியில் சென்றால் காளி, பைரவர் அல்லது சக்கரத்தாழ்வாரை வணங்கி விட்டுச் செல்லுதல் நலம்.

நீங்கள் எந்த செயலுக்காக வெளியே செல்வதாக இருந்தாலும் நெற்றியில் ஒரு விபூதி இட்டு, இஷ்ட தெய்வத்தை வணங்கி சுவாமி ஸ்லோகங்களை சொல்லி விட்டுப் புறப்பட்டால் போகும் காரியங்கள் ஜெயம் ஆகும் என்பது நம்பிக்கை. அதிலும் நீங்கள் வழிபடுவது உங்களது குல தெய்வமாக இருந்தால் மேலும் பல நல்ல பலன்களை நீங்கள் இயற்கையாகவே பெறலாம். இப்படியாக தெய்வங்களை தேர்ந்து எடுத்து வணங்கி விட்டு வெளி இடங்களுக்குச் சென்றால் செல்லும் காரியம் சித்தி ஆகும் என்பது ஐதீகம்.
Previous Post Next Post