கேழ்வரகு
கேழ்வரகு ஆண்டுக்கு ஒருமுறை விளையும் சிறுதானியம் ஆகும். கேழ்வரகானது
ஆரியம், ராகி, நச்சினி, மண்டுவா மற்றும் கேப்பை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது
ஆங்கிலத்தில் ‘Finger Millet’ என அழைக்கபடுகிறது. நம் முன்னோர் காலத்தில் அன்றாட
உணவாக இருந்த கேழ்வரகு இன்று அரிய தானியமாக மாறிவிட்டது.
கேழ்வரகின் வரலாறு
கேழ்வரகு முதன் முதலில் எத்தியோப்பியாவின் உயர்ந்த மலைப்
பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டது. கேழ்வரகு பயிரானது வெப்ப மண்டலம் மற்றும் மித
வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இந்தபயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்பு
இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டது. இந்தியாவில் கர்நாடகாவிலும், தமிழ்நாட்டிலும் அதிகமாக ராகி உற்பத்தி செய்யபடுகிறது. மேலும் ஆந்திரா,
உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களிலும் ராகி சாகுபடி
செய்யப்படுகிறது. இந்தியாவில் அதிகமாக பயிர் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கா,
மடகாஸ்கர், இலங்கை, மலேசியா,
சீனா மற்றும் ஜப்பானிலும் பயிர் செய்யப்படுகிறது.
கேழ்வரகில் உள்ள ஊட்டசத்துக்கள்
மற்ற எந்த தானியத்தை விடவும் கேழ்வரகில்தான் மிக அதிக
கால்சியமும், பாஸ்பரசும்
காணப்படுகிறது. கேழ்வரகில் ‘பி’ காம்ப்ளக்ஸ்
வைட்டமின்கள், மினரல்கள் போன்ற அத்தியாவசிய சத்துகள் நிறைந்துள்ளது.
கேழ்வரகின் மருத்துவ பயன்கள்
கேழ்வரகு ஒரு ஆரோக்கிய டானிக்
கேழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா
மற்றும் பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து
நோய்களும் குணமாகும். இவ்வளவு நோய்களை சரிசெய்யும் கேழ்வரகை, ஒரு சத்துக்கள் நிறைந்த ஆரோக்கிய டானிக் என்றே கூறலாம்.
எலும்பு தேய்மானம் குறையும்
வயதானால் எலும்புகள் தேய்மானமடைவது இயற்கை. கேழ்வரகை
சாப்பிட்டு வந்தால் வயதானவர்களுக்கும், 45 வயதை தாண்டிய மாதவிடாய் கடந்த பெண்களுக்கும் ஏற்படும்
எலும்புத் தேய்மானம் குறையும், மேலும் இரத்தத்தில் கால்சியம்
அளவை தக்க வைக்கவும் உதவுகிறது.
உடல் பருமனை குறைக்கும்
கேழ்வரகில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் சில அமினோ
அமிலங்களால், அடிக்கடி
பசி ஏற்படுவதை குறைத்து உடற்பருமன் குறைய உதவுகிறது. இதனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து, நல்ல
கொழுப்பின் அளவை சரி செய்வதால் இரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் சமநிலை ஏற்பட உதவும்.
ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்
ரத்தச்சோகை நோய்க்கு உள்ளவர்கள், ஹீமோகுளோபின் அளவு குறைவாக
உள்ளவர்களுக்கும் கேழ்வரகு ஒரு அற்புதமான மருந்தாகும். கேழ்வரகில் இயற்கையாகவே
இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, இரத்த
சோகை நோயை குணப்படுத்த உதவும்.
உடலுக்கு குளிர்ச்சி தரும்
உடலைக் குளிர்ச்சியாக்கும். உடலுக்கு நல்ல வலுவையும் தரும்.
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு அரு மருந்து இந்த கேழ்வரகு. அரிசி
சாதத்துக்குப் பதிலாக கேழ்வரகு கூழைக் குடித்துவந்தால், விரைவாக எடை குறையும்.
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்
கேழ்வரகில் உள்ள இயற்கை இரசாயன கலவைகள் செரிமானத்தை
குறைக்கின்றது. இது சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள்
வைக்க உதவுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக்
கொள்வது மிகவும் நல்லது.
எல்லா வயதினருக்கும் ஏற்றது
கேழ்வரகானது எளிதில்
ஜீரணமாகக் கூடிய ஒரு மிகச்சிறந்த உணவாகும். இது பச்சிளங் குழந்தைக்கு கூட உகந்தது.
6 மாத குழந்தை முதலே கூழாக்கிக் கொடுக்கலாம்.
பால் கொடுக்கும் தாய்மார்களின் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும், இரத்த சோகை நோய் குணமாகவும் கேழ்வரகு உதவுகிறது.
உடலின் கொழுப்பு அளவை குறைக்கும்
கேழ்வரகில் ‘லெசித்தின் மற்றும் மெத்தியோனைன்’ போன்ற அமினோ
அமிலங்கள் இருப்பதால், அது கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து வெளியேற்றி, உடலின் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
ஒவ்வாமையை ஏற்படுத்தாது
ஒரு சிலருக்கு ‘க்லூடன் அலர்ஜி’ என கூறப்படும்,
கோதுமை முதலான உணவுப் பொருட்களால் உண்டாகும் வாந்தி, பேதி என ஒவ்வாமை ஏற்படும். கேழ்வரகில், ‘க்லூடன்’
இல்லாததால், இதை ஒரு சிறந்த மாற்று உணவாகப்
பயன்படுத்தலாம்.
உடலை கட்டுக்குள் வைத்திருக்கும்
கேழ்வரகை சாப்பிடுவது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும்.
மேலும் கேழ்வரகில் உள்ள அமிலங்கள் மனகவலை, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை
போக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, ஒற்றை தலைவலியில்
இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. மேலும் உடலின் இயல்பான செயல்பாட்டிற்க்கும்,
சேதமடைந்த செல்களை சரி செய்வதிற்க்கும் கேழ்வரகு உதவுகிறது.
அதனால் நாம் அன்றாடம் சாப்பிடும் இட்லி, தோசை, புட்டு,
களி, கஞ்சி, பக்கோடா,
இனிப்பு உருண்டை என அனைத்து உணவிலும் கேழ்வரகை பயன்படுத்துவது மிகவும்
நல்லது.