-->

கொண்டைக்கடலை மருத்துவ பயன்கள் மற்றும் நன்மைகள்

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலை நம் நாட்டில் பரவலாக உபயோகபடுத்தபடும் ஒரு சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருள். கடவுளுக்கு படைக்கபடும் உணவுபொருட்களில் பெரும்பாலும் இது படையலாகப் படைக்கப்படுகிறது.
இது பசியைப் போக்கி ஆற்றலை வழங்குவதுடன் உடல்நலனையும் மேம்படுத்துகிறது. ஆதலால்தான் இதனை நம் முன்னோர்கள் விரத வழிபாட்டில் பயன்படுத்தியுள்ளனர்.

கொண்டைக்கடலை வகைகள்

கொண்டைக்கடலையிலிருந்து நாம் பயன்படுத்தும் உடைத்தகடலை, உப்புகடலை, கடலைப்பருப்பு ஆகியவை பெறப்படுகின்றன. இவை பொதுவாக வெள்ளை, கறுப்பு, மற்றும் பச்சை நிறங்களில் காணப்படுகின்றன.

கொண்டைக்கடலையின் வளர் இயல்பு

கொண்டைக்கடலை செடி 30 முதல் 60 செமீ உயரம் வரை வளரும். இது வறட்சியைத் தாங்கி வளரும் குளிர்காலப் பயிர் ஆகும். நல்ல வளமான மண் மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகியவை இருந்தால் இந்த செடி நன்கு வளர்ந்து நல்ல மகசூலை தரும்.

இந்த செடி இறகு வடிவ இலைகளைக் கொண்டது. இத்தாவரத்தில் சிறிய காய்கள் தோன்றுகின்றன. இக்காய்களில் 1-3 விதைகள் இருக்கும். இவையே நாம் உண்ணும் கொண்டைக்கடலை ஆகும்.

கொண்டைக்கடலையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள்

கொண்டைக்கடலையில் ஏராளமான நுண்ணிய ஊட்டச்சத்துக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. 100 கிராம் கொண்டைக்கடலையில் 9 கிராம் புரதம், 8 கிராம் நார்ச்சத்து, 2.6 கிராம் கொழுப்பு, இரும்பு சத்து மற்றும் மக்னீஷியம் இருக்கிறது.  மேலும் 164 கலோரிகள் இருக்கிறது.  

கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

கொண்டைக்கடலையின் மருத்துவ பயன்கள்


சர்க்கரை நோயை கட்டுபடுத்தும்

கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் கரையும்  நார்ச்சத்துக்கள், புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது. அதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க இவை உதவி  செய்கிறது.

இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்

கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள் ஆகும். ஏனெனில் இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

புற்றுநோய் வராமல் தடுக்கும்

கொண்டைக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்படாது. கொண்டைக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு. மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரிசெய்யவும் கொண்டைக்கடலை உதவும்.

உடல் எடை குறையும்

கொண்டைக்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடை குறைக்க நினைத்தால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.  உங்களுக்கு அவ்வப்போது ஏற்படும் பசியை போக்கி நீண்ட நேரம் பசி ஏற்படாமல் தடுக்கும்.

ஆண்மை அதிகரிக்கும்

கொண்டைக்கடலையை தண்ணீரில் ஊற வைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கி ஆண்மை அதிகரிக்கும்.

சிறுநீர் பிரச்சினைகள் தீரும்

கொண்டைக்கடலையை வறுத்து பொடி செய்து தினமும் இருமுறை உட்கொண்டு வந்தால் வயிற்று பொருமல், சிறுநீர் சரிவர வெளிப்படாமல் சொட்டு சொட்டாக போதல், சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.

எலும்புகள் உறுதியடையும்

எலும்புகளின் உறுதிக்கு வைட்டமின், தாதுக்கள், கால்சியம், மக்னீஷியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் கே போன்றவை தேவை. இவை அனைத்தும் கொண்டைக்கடலையில் அபரிமிதமாக உள்ளது. எலும்புகளின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் கொண்டைகடலையை  அதிகம் சேர்த்து கொள்ளலாம்.  

இருதய ஆரோக்கியம் மேம்படும்

உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதனால் இருதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவு.  கொண்டைக்கடலையை அதிகம் சாப்பிடுவதால் இருதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மூளை வளர்ச்சி அதிகரிக்கும்

கொண்டைக்கடலையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூளை செயல்பாடு அதிகரிக்கும், தசைகளின் வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலத்திற்கும், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவும்.

நரம்பு மற்றும் கல்லீரல் பலப்படும்


வைட்டமின் பி 9 மற்றும் ஃபோலேட் ஆசிட் ஆகியவை கொண்டைக்கடலையில் இருக்கிறது.  மூளை செயல்பாட்டிற்கும், தசைகளின் வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலத்திற்கும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் கொண்டைக்கடலையை அடிக்கடி சாப்பிடலாம்.  கல்லீரலில் உள்ள கொழுப்புகளை குறைத்து உறுப்புகளை சீராக வேலை செய்ய வைக்கும் தன்மை கொண்டைக்கடலைக்கு உண்டு. 
Previous Post Next Post