-->

குங்குமம் இடுவதில் உள்ள சாஸ்திர சம்பிரதாயங்கள் என்னவென்று தெரியுமா


திலகம் என்றால் என்ன?


"திலம்" என்ற சொல்லில் இருந்து தான் "திலகம்" என்ற சொல் வந்தது. "திலம்என்றால் "எள்'. அளவில் சிறிதாக எள்ளைப் போல இட்டுக் கொள்வதால் "திலகம்" எனப் பெயர் பெற்றது. அக்காலத்தில்அரசர்கள் சந்தனம்ஜவ்வாது போன்ற வாசனைத் திரவியங்களாலான சாந்தை நெற்றியில் வரைந்து கொள்வர். இதற்கு "திலக தாரணம்என்று பெயர். பூக்கள்பாம்புதிரிசூலம் போன்ற வடிவங்கள் இதில் இடம் பெற்று இருந்தன. அவற்றுள் தாமரை மலர் வடிவம் மிகவும் சிறப்பானது.

குங்குமம் வைப்பதால் ஏற்படும் பலன்கள்



ஏன் நெற்றியில் திலகம் இடுகிறோம்?

நாம் ஏன் நெற்றியில் சந்தனம், குங்குமம் வைக்கிறோம் என்று என்றாவது யோசித்தது உண்டா? புருவ மத்தியில், மூளையின் முன்புறம் ‘பைனீயல் கிளாண்ட்’ என்னும் சுரப்பி உள்ளது. யோக சாஸ்திரத்தில் இதனை "ஆக்ஞா சக்கரம்" என்பர். இதனைக் குளிர்ச்சிப்படுத்தவே விபூதி, சந்தனம், குங்குமம் போன்றவற்றை நெற்றியில் இடுகிறோம். அதனால் தான் இதனை "நெற்றித்திலகம்" என்பர். குறிப்பாகக் குங்குமம் அல்லது சந்தனம் வைத்த பின்னர் நெற்றியின் மத்தியில் ஆக்ஞா சக்கரத்தில் அழுத்தம் ஏற்படுகிறது. அதனால், முக தசைகளுக்கு ரத்த ஓட்டம் கிடைக்கிறது.

வகிட்டில் குங்குமம்


திருமணமான பெண்கள் குங்குமத்தை வகிட்டில் இடுவது கணவரின் ஆயுளை மேம்படுத்தும். ஆனால் திருமணம் ஆகாத பெண்கள் குங்குமத்தை வகிட்டில் இடுதல் அவசியம் அற்றது. அபத்தமானதும் கூட. மேலும் சுமங்கலிப் பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அதில் குங்குமம் இடுவதால் தரித்திரம் உண்டாகாது என்பது ஐதீகம்.

குங்குமம் வைப்பதால் ஏற்படும் பலன்கள்


கோயில்களில் பெண்களுக்கு குங்குமம் கொடுக்கும் சமயத்தில் பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். மற்றபடி, பெண்கள் குங்குமம் வைக்கும்போது, ‘ஸ்ரீயை நமஹஅல்லது மகாலட்சுமியே போற்றிஎன்று மனதிற்குள் சொல்லி கொள்வது பல நன்மைகளை அளிக்கும், குடும்பத்தின் செல்வ வளத்தைப் பெருக்கும். அதேபோல, வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது என்பது தருபவர் பெறுபவர் என இருவருக்குமே மாங்கல்யத்தின் பலத்தைப் அதிகரிக்கும்.

ஆண்கள் குங்குமம் வைக்கலாமா?


ஆண்கள் குங்குமம் இடுவது சரியா? என்பது பலரின் கேள்வி. அம்பாளை குல தெய்வமாகவோ அல்லது பிரதான தெய்வமாகவோ வைத்து வழிபடும் ஆண்கள் குங்குமத்தை அணியலாம். ஆனால், நெற்றியில் மட்டும் தான் அணிய வேண்டும். அதே சமயத்தில், சக்தியை உபாசனை செய்யும் ஆண்கள் மற்ற பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் நெற்றிக் குங்குமம் இந்நிலையில் எதிர்மறை பலன்களை ஏற்படுத்தி விடும். எனவே, மனக்கட்டுப்பாடு இல்லாத ஆண்கள் குங்குமத்தை அணியாமல் இருப்பது நல்லது. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் வைத்து கொள்வது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

குங்குமம் எந்த விரலால் வைத்து கொண்டால் என்ன பலன்?

1. குருவிரல் எனப்படும் ஆள்காட்டி விரலால் குங்குமம் வைத்து கொள்வது தலைமை பண்பு, நிர்வாகம், ஆளுமை போன்ற திறன்களை வளர்க்கும். காலப்போக்கில் அந்த நபரை தலைமைப் பதவிக்கு கொண்டு போகும்.

2. சனி விரல் என்ற நடுவிரல் மூலம் குங்குமம் வைத்து கொள்வது தீர்க்கமான ஆயுளை அளிக்கும்.

3. கட்டை விரலால் குங்குமம் வைத்து கொள்வது என்பது மனதினில் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகரிக்கும்.

4. மோதிர விரலால் குங்குமம் இடுவது செழிப்பைத் தரும். அத்துடன், நேர்மையுடன் செயல்படும் எண்ணம் மேலோங்கும்.
 

Previous Post Next Post