பனிவரகு
சிறுதானியங்களில் பனிவரகுக்கு என்று முக்கிய இடமுண்டு. இது குளிர்காலங்களில்
அதிகாலையில் பெய்யும் பனியிலேயே இது வளர்ந்து விடும். அதனால்தான், இதற்கு பனிவரகு என்று பெயர். இதை
ஆங்கிலத்தில் ‘Proso Millet’ என
அழைப்பார்கள். ஒரு புன் செய் தானியம். சிறுதானியங்களில் மிகவும் குறைந்த நாட்களிலே
வளரும் தன்மையுடையது பனிவரகு. இது குறுகிய கால வயதுடைய வறட்சியைத் தாங்கக்கூடிய
ஒரு பயிராகும். இது 90 முதல் 120 செ.மீ
உயரம் வரை வளரும்.
பனிவரகில் அடங்கியுள்ள சத்துக்கள்
பனிவரகில் ஈரப்பதம், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தாது உப்புக்கள், மாவுச்சத்து,
கார்போஹைட்ரேட், நார்சத்து, கால்சியம்,
பி காம்ளக்ஸ், தாதுக்கள், கலோரிகள், ரிபோஃப்ளோவின், மக்னீஷியம்,
சோடியம், பொட்டாசியம், தாமிரம்,
மாங்கனீசு, துத்தநாகம், குரோமியம்,
சல்பர், குளோரைடு ஆகிய சத்துக்கள்
இருக்கின்றன.
வரகிற்கும் பனிவரகிற்கும் உள்ள வித்தியாசங்கள்
வரகு
இது வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிராகும். பஞ்சம் வந்த முந்தைய
காலங்களில் இந்த பயிரை நம்பியே பல ஆயிரக்கணக்கான மக்கள் பசியாறி வந்தனர். இதன்
காரணத்தால் தான் இந்த பயிரின் விதைகளை கோவில் கோபுர கலசங்களில் வைத்து பூஜை
செய்கின்றனர்.
இதன் விதைகள் நீண்ட காலம் சேமித்து வைத்தாலும் நன்றாக
முளைக்கும் திறன் கொண்டவை. மிகக்குறுகிய காலத்தில் மிக குறைந்த மழை பெய்தாலும் அதை
கொண்டு அதிக அளவு தானியங்களை உற்பத்தி செய்ய முடியும்.
உடலில் உள்ள புண்களை ஆற்றும் தன்மையும், நுரையீரல் சம்பந்தமான நோய்களையும்,
வயிற்றுப் போக்கை குணப்படுத்தும் சக்தியும் வரகுக்கு உண்டு.
பனிவரகு
இந்த பயிர் மிக குறுகிய காலத்தில் அறுவடைக்கு வரும்.
மானவாரி பருவத்தில் விவசாயிகள் லாபம் அடையும் ஒரு பயிர் என்றால் அது பனிவரகு என்று
சொல்லலாம். இது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளில் அறிமுகமானது.
உமி நீக்கப்பட்ட பனிவரகு தானியமானது, அதிக புரதச்சத்தை கொண்டது. ஆடி,
புரட்டாசி மாதங்களில் மானாவாரியாக எல்லா வகை மண்ணிலும் வளரும்
இயல்பு கொண்டது.
பனிவரகு மருத்துவ பயன்கள்
1. நரம்பு மண்டலத்தை பலமாக்கி, நாள் முழுவதும் உங்களை
சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
2. பனிவரகு உடலில் உள்ள சர்க்கரை அளவினை குறைக்க வல்லது.
3. சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
4. இளநரை, வயது முதிர்ந்த தோற்றம்
போன்றவை ஏற்படுவதை தடுக்கும்.
5. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். கல்லீரலில் உண்டாகும் கற்களை
கரைக்கும். மேலும் கற்கள் உருவாகாமல் தடுக்கும். உடலில் ஏற்பட்ட மரபணு குறைபாடுகளை
போக்கும். அலர்ஜியை ஏற்படுத்தாது.
6. அறுவை சிகிச்சை செய்யும்போது ஏற்படும் புண்களை விரைவில்
ஆற்றும்.
7. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை போக்கும்.
8. வயிற்றில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நல்லது.
9. வயதானவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி நோயை போக்கும்.
10. ரத்தஅழுத்தம், மற்றும் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.
11. வரகு அரிசியை பயன்படுத்தி கஞ்சி செய்து சாப்பிட்டால்
உடல் பருமன் குறையும்.
12. சிறுநீர்பெருக்கியாக செயல்படும், மலச்சிக்கலை போக்கும், மேலும் உடல் பருமனை குறைக்கும்.
பனிவரகை பயனபடுத்தி முறுக்கு, சீடை, அதிரசம் போன்ற பலகாரங்கள்
செய்யலாம்.