-->

சீதாபழம் நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள்


சீதாபழம்

சீதா பழம் மருத்துவ குணம் நிறைந்த ஒரு பழமாகும். மருத்துவ உலகில் சீதா பழத்திற்கு என்று ஒரு தனி இடம் உண்டு. சீதாப் பழம் பார்ப்பதற்கு வெளித்தோற்றத்தில் வித்தியாசமாக இருந்தாலும்  அதன் உள்ளிருக்கும் சதைப்பகுதி மிகவும் இனிப்பாகவும்,சுவையாகவும் இருக்கும்.


சீதாபழத்திற்கு ஆங்கிலத்தில் 'கஸ்டர்ட் ஆப்பிள்'  என்று ஒரு பெயர் உண்டு.  'கஸ்டர்ட்' என்ற ஐஸ்கிரீம் போன்ற சுவை இந்தப் பழத்திற்கு இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது.

சீதாப்பழம் இரத்த விருத்தியை அதிகபடுத்தி இரத்த சோகையை  குணப்படுத்துகிறது. இப்பழத்தில் உள்ள குளுக்கோஸ் உடல் சோர்வை அகற்றி உடலை சுறுசுறுப்புடன் வைத்திருக்க உதவுகிறது.

நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை சீதாப்பழத்திற்கு உண்டு.
சீதாபழத்தில் நம் உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்கள், புரதம், தாதுப் பொருட்கள், , நல்ல கொழுப்புச் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் நிறைந்து உள்ளது.

சீதா பழம் நன்மைகள்

மன அழுத்தத்தினால் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் தினமும் தூங்க செல்வதற்கு முன் ஒரு சீதாப்பழம் சாப்பிட்டுப் வந்தால் மன அழுத்தம் குறைந்து ஆழ்ந்த தூக்கம் உண்டாகும்.

இதற்க்கு காரணம் இப்பழத்தில் அடங்கியுள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் தாதுப் பொருட்கள்தான். இவை இரண்டிற்குமே மன அழுத்தத்தை கட்டுபடுத்தும் தன்மை உண்டு. 

சீதா பழத்தில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்களும், கனிமச்சத்துக்களும் நம் உடலுக்கு பல நன்மைகளை அள்ளித்தருகிறது. சீதாப் பழத்தில் உள்ள மெக்னீசியம் இதய நோய், மாரடைப்பு ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.

சீதாப் பழத்தில் உள்ள வைட்டமின் பி மூச்சுக்குழாயில் ஏற்படும் பாதிப்பை குறைத்து ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கிறது.
.

சீதா பழம் மருத்துவப் பயன்கள்


  • சீதாப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் ஜீரண கோளறு போன்ற பாதிப்புகள் ஏற்படாது. பித்தம், வாந்தி, பேதி, தலைசுற்றல் போன்றவையும் ஏற்படாது.
  • சீதாப் பழத்திலுள்ள பல சத்துக்கள் இதயத்தைப் பலப்படுத்தி, சீராக இயங்கச் செய்யும். இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் இதயத்தை பாதுகாக்கும்.
  • தொடர் வாந்தி, குமட்டல் ஏற்பட்டால் சீதாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடனே நின்று விடும்.
  • அறுவை சிகிச்சைக்குப் பின், சீதாப்பழம் சாப்பிட்டு வந்தால், உடல் உள்ளுறுப்புகளில் உள்ள காயங்கள் விரைவில் ஆறிவிடும்.
  • மலச்சிக்கல் உள்ளவர்கள் சீதாப்பழத்தைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகிவிடும்.
  • சிறிது வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து, சீதாப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர, குடற்புண் விரைவில் குணமாகும்.
  • சிறுநீர் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், சீதாப்பழச் சாறுடன், சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து பருகினால், சிறுநீர் தாராளமாகப் பிரியும். நீர்க்கடுப்பும் நீங்கும்.
  • உடம்பு ஊளைச்சதை உள்ளவர்கள் தொடர்ந்து சீதாப்பழம் சாப்பிட்டு வர, ஊளைச்சதை வெகுவாக குறையும்.
  • சீதாபழம் உடல் சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.உஷ்ணத்தால் ஏற்படும் மாந்தத்தைக் குணப்படுத்தும் தன்மை இப்பழத்திற்கு உண்டு.
  • மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சீதாப்பழத்தை தினமும் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் விரைவில் நல்ல மாற்றம் ஏற்படும்.
  • இரவில் படுக்கப் போகும் முன் ஒரு சீதாப்பழத்துடன் இரண்டு பேரீச்சம் பழமும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் வரும்.
  • சரும வறட்சி உள்ளவர்கள் சீதாப்பழச்சாறு குடித்து வர, சரும வறட்சி நீங்கி இயல்பு நிலை பெறும்.
  • சீதாப்பழத்தில் உள்ள வைட்டமின் 'சி' சளி  தொந்தரவு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  • சீதாப் பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேருவது தவிர்க்கப்படும்.
  • சீதாப்பழத்துடன், குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.
  • சீதாப்பழத்துடன், சிறிது வெள்ளைப் பூண்டு சேர்த்து நைசாக அரைத்து  தேமல் மீது பூசி வர  தேமல் மறைந்து விடும். சீதாப்பழச்சாறுடன், திராட்சைப் பழச்சாறு கலந்து, பருகி வர, நரம்புகள் வலுப்படும்.


Previous Post Next Post