வரகு
சிறுதானிய வகைகளுள் வரகும் ஒன்றாகும். வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. அரிசி,
கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம்.
மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும்
நல்லது. இது ஆங்கிலத்தில் ‘Kodo Millet’ என்று அழைக்கபடுகிறது.
வரகில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள்
புரதச்சத்து, சர்க்கரை, கொழுப்பு, மினரல்ஸ், கொழுப்புச்சத்து,
கால்சியம் பாஸ்பரஸ், இரும்புசத்து, தையமின், நையஸின் போன்ற சத்துக்கள் வரகில்
மிகுதியாக உள்ளது.
வரகு அரிசியின் மருத்துவ நன்மைகள்
சீறுநீரகத்தின் செயல்பாடு மேம்படும்
கோடைகாலங்களில் வரகரிசி கொண்டு செய்யப்படும் உணவுகளை அதிகம்
சாப்பிடுவதால் தாகம் தணிவதோடு, சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதை தடுகும். மேலும் சீறுநீரகங்கள் சிறுநீர்
வழியாக உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும். சிறுநீரகங்களின் செயல்பாடுகளை
மேம்படுத்தும்.
இதய ஆரோக்கியம் மேம்படும்
இதயம் சீராக வேலை செய்வதற்கு இருக்க சத்துமிக்க உணவுகளை
சாப்பிடுவது மிகவும் அவசியம். வரகரிசி இதயத்திற்கு பலம் தரும் தன்மை அதிகம்
கொண்டது. வரகரிசி உணவுகளை சாப்பிட்டு வந்தால் இதயம் ஆரோக்கியம் மேம்படும்.
இரத்தம் சுத்தமடையும்
வரகரிசியை சாப்பிடுவதால் ரத்தத்தில் ஊட்டச்சத்துகள்
அதிகரிக்கும். இது ரத்தத்தை தூய்மைப்படுத்துவதோடு, ரத்த ஓட்டத்தை சீராக்கும். எனவே ரத்தம்
சுத்தமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் வரகரிசி மூலம் செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவது
மிகவும் நல்லது.
ஆண்மை குறைபாடுகள் நீங்கும்
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் பலருக்கும் வேலைசுமை, குடும்ப
பிரச்சனை காரணமாக மனஅழுத்தம் மற்றும் கவலைகள் அதிகம் ஏற்படுகிறது. அதிக மனஅழுத்தம்,
கவலை காரணமாக ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது. இவர்கள் வரகரிசியை சாப்பிடுவதன் மூலம் ஆண்மை
குறைபாட்டை போக்க முடியும்.
மலச்சிக்கலை போக்கும்
வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள்
ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும். ஏனெனில் இதில்
நார்ச்சத்து மிகவும் அதிகம்.
அபரிமிதமான ஊட்டச்சத்து நிறைந்தது
நமது உடல்நிலை நான்றாக இருக்க நமக்கு தேவையான அளவு தாது
உப்புக்கள், இரும்பு
சத்து, வைட்டமின்கள், சுண்ணாம்பு சத்து,
பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை மிகவும்
அத்தியாவசியமாகும். மேற்கண்ட இந்த சத்துக்கள் யாவும் வரகரிசியில் நிறைந்துள்ளது.
வரகரிசி பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான
ஊட்டச்சத்துகள் அனைத்தும் குறைவின்றி கிடைக்கும்.
உடல் எடையை குறைக்கும்
இன்றைய காலத்தில் பலரும் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு
வருகின்றனர். உடல் எடையை குறைக்க நார்ச்சத்து அதிகம் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய உணவுபொருட்களை
சாப்பிடுவது அவசியம். வரகரிசியில் இத்தகைய நார்சத்து கொண்ட கொழுப்பை கரைக்கக்கூடிய
பொருட்கள் உள்ளன. வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல்
சீக்கிரத்தில் எடை குறையும்.
நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்
இன்று உலகில் பெரும்பலனோருக்கு இருக்கும் ஒரு நோய் நீரிழிவு
நோயாகும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்த நமது உடல் இயற்கையிலேயே இன்சுலின்ஐ சுரக்கும்.
வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சாப்பிட்டு
வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள்
வரும்.
உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் தன்மை வரகு
அரிசிக்கு உண்டு. வரகை சரியாக தோல் நீக்கம் செய்யாவிட்டால், தொண்டையில் அடைத்துக் கொண்டு
ஒருவிதமான அலர்ஜியை உண்டாகும்.
தற்போது பொதுவாக சிறுதானியங்களின் மேல் மக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுவதால், வரகின் பயன்பாடு மெல்ல அதிகரித்து கொண்டு வருகின்றது. சிறுதானியமான இதை
அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பல்வேறு நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். இதை உப்புமா,
பொங்கல், புளியோதரையாக செய்தும் சாப்பிடலாம்.