கோதுமை
கோதுமை உலகில் முக்கியமான
உணவுப்பொருட்களில் ஒன்று. இது உலகம் முழுதும் பயிரிடப்படுகிறது. இது ஒரு புல்
வகையைச் சேர்ந்த தாவரமாகும். இது உலகில் அதிகம் பயிரிடப்படும் உணவு தானியங்களில்
மூன்றாவது இடத்தில் உள்ளது. கோதுமை உணவாகவும்,
அறுவடைக்குப்பின் கழிக்கப்பட்ட தாவர மிச்சங்கள் கால்நடைத் தீவனமாகவும்
பயன்படுகிறது. உலகம் முழுவதும் பல விதமான கோதுமை இரகங்கள் விளைவிக்கப்படுகின்றன.
கோதுமை வகைகள்
கோதுமையில் வெண்கோதுமை, செங்கோதுமை இரு முக்கியமான வகைகளாகும். ஆனால், வேறு பல இயற்கையான வகைகளும் உள்ளன. உதாரணமாக, எத்தியோப்பிய
நிலங்களில் விளையும் ஊதா நிற கோதுமையைக் குறிப்பிடலாம். மேலும் கறுப்பு, மஞ்சள் மற்றும் நீலக் கோதுமை போன்ற கோதுமை வகைகளும் உள்ளன.
இந்தியாவில் கோதுமை
இந்தியாவில் கோதுமை பஞ்சாபில் தான் அதிகம்
பயன்படுத்தபடுகிறது. இதுதான் பஞ்சாபிகளின் முக்கியமான உணவு. தற்போது தென்மாநில
மக்களிடமும், கோதுமை
முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. கோதுமை என்பது அனைத்து காலத்திற்கும் ஏற்ற
உணவு. குறிப்பாக இளம் தலைமுறையினர் கட்டாயம் கண்டுகொள்ளவேண்டிய உணவுதான் கோதுமை.
கோதுமையை பயன்படுத்தி இனிப்பு, காரவகைகள், பொரித்த உணவுகள், கேக்குகள், பிஸ்கெட்டுகள்
என்று ஏராளமானவை செய்யப்படுகிறது.
கோதுமையில் அடங்கியுள்ள சத்துக்கள்
கலோரிகளை பொறுத்தவரை அரிசியில் உள்ள அதே
அளவுதான் கோதுமையிலும் உள்ளது.
கோதுமையில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாதுஉப்புக்கள், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜெரோட்மின், தயாமின், ரிபோஃப்ளோவின், நயாசின், ஃபோலிக் ஆசிட், காப்பர், மக்னீசியம்,
சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு,
துத்தநாகம், சல்ஃபர், குரோமியம்
போன்றவை உள்ளது.
இப்படி எல்லா சத்துகளும் கோதுமையில் அதிகம்
நிறைந்துள்ளது.
கோதுமையின் மருத்துவ பயன்கள்
இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோதுமையில் எண்ணற்ற மருத்துவ
பயன்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை பின்வருமாறு பார்க்கலாம்,
புளித்த ஏப்பம் சரியாகும்
வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த
ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமையை ரவை போல அரைத்து கஞ்சி செய்து குடித்து
வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
வியர்க்குரு குறையும்
வியர்க்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி
நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும். கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக்
கொள்பவர்களுக்கு உடல் பலம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.
புற்று நோயை தடுக்கும்
கோதுமையில்
புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. எனவே கோதுமையை
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்று நோய் ஏற்படும் அபாயம் தடுக்கபடுகிறது.
கபம் சரியாகும்
கோதுமையை முந்தைய நாளே நீரில் ஊற வைத்து, காலையில் இடித்து பசையாக்கி,
அதை மெல்லிய துணியில் வடிகட்டி பிழிந்து வருகின்ற பால் கோதுமைப்
பாலாகும். இந்த பாலை கப நோயாளிகள் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சர்க்கரை அளவு குறையும்
சம்பா கோதுமையைச் சாப்பிடும் போது சர்க்கரை வியாதி
உள்ளவர்களுக்கு, சர்க்கரை
அளவு கணிசமாகக் குறையும். மேலும் மொத்த கொழுப்புச் சத்து அளவு மற்றும் டிரை கிளைசி
ரைட்ஸ் அளவும் கணிசமாக குறைகிறது.
எரிச்சல் தீரும்
கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு புண், மேல்
தோல் உரிந்த இடம் ஆகியவற்றில் வெண்ணெய் கலந்து பூசினால் எரிச்சல் தணியும். கோதுமை
மாவை களியாக செய்து கட்டிகளின் மேல்
வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.
இரத்தம் சுத்தமாகும்
தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள்
வெளியேறி இரத்தம் சுத்தமாகும். உடல் பலம் அதிகரிக்கும், ஆண்களுக்கு
ஆண்மை அதிகரிக்கும்.
வலிகள் குணமாகும்
முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட வலிகள் குணமாகும்.
இன்னும் ஏராளமான மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ள கோதுமை
பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை
சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.