அண்ணாச்சி பூ
அண்ணாச்சி பூ என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திர
சோம்பு கறிகள், மற்றும் பிரியாணி வகைகளில் பார்த்திருப்போம். இந்தியாவில்
பயன்படுத்தக்கூடிய மசாலாப் பொருட்களில் இந்த அண்ணாச்சி பூவும் முக்கியமான ஒன்று.
இதற்கு ‘அன்னாசி மொக்கு’, தக்கோலம், நட்சத்திர சோம்பு என்னும் வேறு சில பெயர்களும்
உண்டு. இது வெறும் மணத்துக்காக மட்டுமல்லாமல் உணவை அழகுபடுத்துவதற்க்கும், மற்றும் மருந்தாகவும்
பயன்படுகின்றது.
அண்ணாச்சி பூ பூர்வீகம்
அண்ணாச்சி பூ சீனாவை பூர்வீகமாக கொண்டது. சீன
ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த அண்ணாச்சி பூவை பயன்படுத்தி வந்தார்கள். இது
படிப்படியாக எல்லா நாடுகளுக்கும் பரவி சென்று இந்தியாவில் தற்போது இது ஒரு தவிர்க்க
முடியாத மசாலா பொருளாக மாறி உள்ளது.
அண்ணாச்சி பூ எண்ணெய்
அண்ணாச்சி பூவின் மூலம் எண்ணெய்களையும் தயாரிக்கபடுகிறது.
இந்த எண்ணெய் சரும அலர்ஜி அனைத்தையும் தீர்க்கிறது. ரத்த ஓட்டத்தை சீராக்கவும்
மற்றும் நரம்புகளை வலுவாக்கவும் இந்த எண்ணெய் உதவுகிறது. இதில் முக்கியமாக
அனெத்தோல், எஸ்ட்ராகோல்,
ஃபோனிகுலின், லிமோனீன், மெத்தில்
சாவிகோல், லினோலிக் அமிலம் மற்றும் பால்மிடிக் அமிலம் உள்ளன.
எனவே நாம் அறிந்திராத ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளளது.
நட்சத்திர சோம்பு
நட்சத்திர வடிவத்தில் இருக்கும் இந்த அன்னாசிப்பூவை
முதியவர்கள் கொதிக்க வைத்த நீரில் சேர்த்து அந்த நீரை அருந்தி வருகிறார்கள். நாம்
தினமும் பயன்படுத்தி வரும் கரம் மசாலா போன்ற மசாலா வகைகளிலும் இதை சேர்த்து வருகிறார்கள். இந்தியாவில் மசாலாவை
பயன்படுத்தி சமைக்கப்படும் அனைத்து
உணவிலும் இந்த அன்னாச்சி பூ தவிர்க்க முடியாத ஒரு மசாலா பொருளாக சேர்க்கபட்டு
உள்ளது.
அன்னாசி பூவின் மருத்துவ பயன்கள்
வாயு பிரச்சனை நீங்கும்
அன்னாசிப் பூவில் சற்று இனிப்பு சுவை கொண்டது. இதை
உணவில் சேர்ப்பதன் மூலமாக நமக்கு இரண்டு வகையான ருசியை தருகிறது. மேலும் வாயு
பிரச்சனையை முழுமையாக குறைத்து நமது உணவை மிக எளிதில் செரிமானம் செய்வதற்கு
உதவுகிறது. இந்தியாவில் சுமார் 23% மக்கள் வாயு மற்றும் செரிமானப் பிரச்சனைகளில்
தவித்து வருகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அண்ணாச்சி பூ மிகப்பெரிய தீர்வாக
இருக்கும்.
நரம்பு பிரச்சினை நீங்கும்
உடல்நிலை பிரச்சனையால் அவதிப்படும்
குழந்தைகளுக்கும் அன்னாசிப்பூ கொண்டு செய்யப்பட்ட கஷாயத்தை கொடுக்கிறார்கள்.
துருக்கி, சீனா மற்றும் ரஷ்யா போன்ற
நாடுகளில் உணவு செரிமானத்திற்கு அண்ணாச்சி பூ அதிகமாக பயன்படுத்தபட்டு வருகிறது.
வாந்தி, குமட்டல், வலிப்பு, போன்றவற்றை தடுத்து நரம்பு சம்பந்தமணா பிரச்சனைகளை குணப்படுத்தி
ஆரோக்கியத்தை அதிகரிக்க அண்ணாச்சி பூ உதவுகிறது.
வைரஸ் எதிர்ப்பு மருந்து
வைரஸ் கிருமியை அழிக்கக்கூடிய மருந்தான 'ஷிகிமிக் அமிலம்' அண்ணாச்சி பூவில் உள்ளது. பன்றிக் காய்ச்சலுக்குத் தரப்படும் டாமிபுளு
மாத்திரைகள் அன்னாசிப்பூவில் இருந்து தான் தயாரிக்கப்படுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
அண்ணாச்சி பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக
இருக்கிறது. இதில் பாக்டீரியா வைரஸ், பூஞ்சை மற்றும் ஈஸ்ட் இனங்களைக் கொல்லும் பய ஆக்டிவ்
பொருட்கள் உள்ளது. இந்த எதிர்ப்பு பண்பினால் நம் உடலில் எந்த ஒரு தொற்றுக்களும்
ஏற்படாமல் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அண்ணாச்சி பூ உதவுகிறது. நம் உடலில்
இருக்கும் நச்சுக்களை முழுமையாக அகற்றி நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு
அதிகரிக்கிறது இந்த அன்னாச்சி பூ.
புளித்த ஏப்பம் தீரும்
ஒரு சிலருக்கு புளித்த ஏப்பம் உருவாகும். இது
அவர்களுக்கு அசௌகரியத்தை உருவாக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு அன்னாசி பூ சிறந்த
தீர்வாக இருக்கும். அன்னாசிப் பூவை பொடி செய்து அரை கிராம் அளவு எடுத்து தினந்தோறும் மூன்று வேளையும் உணவுக்குப் பின்
நீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் புளித்த ஏப்பம் உண்டாகாது.
சளி இருமல் பிரச்சனை தீரும்
அன்னாசி பூவை வறுத்து பொடி செய்து அரை ஸ்பூன்
அளவு எடுத்து அதனுடன் சீரகம், மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன்
சேர்த்து காலை, மாலை குடித்து வந்தால் சளி, காய்ச்சல், இருமல் போன்றவை குணமாகும்.
தசை வலி குணமாகும்
அன்னாசி பூவை வறுத்து பொடி செய்து எடுத்து
அதனுடன் விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை தலா 100 மில்லி அளவு எடுத்து
அனைத்தையும் சேர்த்து தைலமாக காய்ச்சவும். இந்த தைலத்தை தசையில் ஏற்படும்
வலிகளுக்கு பயன்படுத்தினால் தசை வலி குணமாகிறது. தசை பிடிப்பை சரிசெய்கிறது.
நெற்றியில் தடவும்போது மன இறுக்கத்தை போக்குகிறது.
இப்போதைய காலகட்டத்தில் ஏராளமான தொற்றுகள்
மனிதர்களை தாக்கி வருகிறது. இது அனைத்தையும் செயலிழக்க செய்வதற்கு நாம் நோய்
எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். எனவே உங்கள்
ஆரோக்கியத்தை அதிகரிக்க இது போன்ற பொருட்களை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.