-->

ஆப்பிள் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் பயன்கள்


ஆப்பிள் பழத்தின் நன்மைகள்  

ஆப்பிள் எல்லா பருவ காலங்களிலும் கிடைக்க கூடிய பலராலும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு பழமாகும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன.

ஆப்பிள் சாலட்

ஆப்பிளில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு முகப் பொலிவையும், முகத்திற்கு அழகையும் தருகிறது.

ஆப்பிள், குமளி பழம், ஆப்பழம், சீமை இலந்தைபழம், அரத்திபழம் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆப்பிள் குளிர் பிரதேசங்களான சிம்லா, காஷ்மீர் போன்ற பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது.

ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலிய சத்துகள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

ஒருவர் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வருவதால் ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்று இதய நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதில் ஆப்பிள் சிறந்து விளங்குகிறது.

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படாது, காரணம் ஆப்பிளில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள். பலரும் ஆப்பிளை தோல் நீக்கிவிட்டு சாப்பிடுகிறார்கள். அது முற்றிலும் தவறு. ஆப்பிளை தோலோடு சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்கள் முழுவதுமாக நமக்கு கிடைக்கும். தோலை நீக்கிவிட்டு வெறும் பழத்தை சாப்பிடுவதில் எந்த பயனும் இல்லை.


ஆப்பிள் பழத்தின் மருத்துவ பயன்கள்

  1. ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்கள் ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டச் சுழற்சி சீராகி இரத்த சோகை பாதிப்பு வெகுவாக குறைய தொடங்கும்.
  2. உடலில் தேக்கம் அடைந்திருக்கும் தேவையற்ற கொழுப்பை குறைக்க ஆப்பிள் பயன்படுகிறது.
  3. செரிமாண மண்டலம் சீராக இயங்க செய்கிறது. கால்சியம் குறைபாட்டை நீங்க செய்து எலும்புகளை பலப்படுத்துகிறது.
  4. நினைவாற்றலை அதிகப்படுத்தி மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
  5. குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஆப்பிள் பழத்தை வேகவைத்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு  நின்று விடும். 
  6. நரம்பு தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் பழம் பெரிதும் உதவுகிறது.
  7. தூக்கத்தில் எழுந்து நடக்கும் இயல்புடையவர்கள் குணமடைய, இரவில் இரண்டு ஆப்பிள் பழங்களை தண்ணீரில் போட்டு ஊறவைத்து அதிகாலையில் அதன் சாரை சாப்பிட்டு வர விரைவில் குணமடையும்.
  8. வறட்டு இருமல் உள்ளவர்கள், தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இருமல் தீரும். 
  9. மெலிந்த உடல் வாகு உடையவர்கள் தினந்தோறும் ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் அடையும்.
  10. குடலில் உள்ள கிருமிகளை வெளியேற்றி குடற்புண் போன்ற பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  11. ஆண்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். 
  12. கண்புரை, கண் பார்வையில் பாதிப்பு இருப்பவர்கள் ஆப்பிளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான நோய்கள் தீர்ந்து விடும்.
  13. நீரிழிவு நோய் தாக்கம் உள்ளவர்கள் நோயை கட்டுக்குள் வைத்திருக்க ஆப்பிள் உதவுகிறது. இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது.  
  14. பிறந்து 6 மாதம் ஆன குழந்தைகளுக்கு ஆப்பிள் ஒரு சிறந்த உணவாகும். ஆப்பிளை நன்றாக வேகவைத்து மசித்து கொடுத்து வந்தால் குழந்தை கொழுகொழுவென்று இருக்கும்.
  15. ஆப்பிளை பழமாகவோ, ஜூஸாகவோ ,சாலட்டகவோ சாப்பிட்டு வருவது உடலுக்கு மிகவும் நன்மை தரும்.
  16. ஆப்பிளை நன்றாக மசித்து சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவவும். பின்னர் அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் பளிச்சிடும். முகத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மறைந்து முகம் போலிவு பெரும்.




Previous Post Next Post