-->

தனியாவை உணவில் சேர்த்துகொள்வதால் ஏற்படும் பயன்கள்


தனியா

கொத்தமல்லி உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருளாககவும், மருந்து பொருளாகவும் விளங்குகிறது. இந்த கொத்தமல்லி செடியின் விதைகள்தான் தனியா என அழைக்கப்படுகின்றது. இந்த தனியாவும் கொத்தமல்லியை போன்றே பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கொண்டதாக இருப்பதால், நமது நாட்டின் உணவு தயாரிப்பு மற்றும் மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

தனியாவின் மருத்துவ குணங்கள்

சமையலில் பயன்படுத்தப்படும் கொத்தமல்லியைப் போலவே அதன் விதைகளும் பல்வேறு விதங்களில் உபயோகபடுத்தபடுகின்றன. நாக்கில் பட்டவுடன் விறுவிறுப்பைத் தரும் கொத்தமல்லி விதைகளை வடமாநிலத்தவர்கள் தனியாஎன்றழைக்கின்றனர். இதற்க்கு மல்லி என்ற பெயரும் உண்டு. இது தனி சுவையும், மணமும் கொண்டது.
தனியா என்னும் கொத்தமல்லி விதை 5000 ஆண்டுகளுக்கு மேல் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இது நம்முடைய மருத்துவ குறிப்புகளில் அதிகமாக காணப்படுகிறது. தனியாவுடைய பயன்பாடு ஆசியா கண்டம் முழுவதும் பரவி காணப்படுகிறது.

தனியாவில் உள்ள சத்துக்கள்

தனியாவில் கொழுப்புசத்து, சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.
அத்தகைய சிறப்பு வாய்ந்த தனியாவை பயன்படுத்துவதால் நமக்கு ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தனியாவின் மருத்துவ பயன்கள்

நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும்

நோய்த்தொற்றை உண்டாக்கும் ஆபத்தான சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவை அழிக்க மல்லி பயன்படுகிறது. சால்மோனெல்லா பாக்டீரியா உணவு சம்பந்தமான நோய்களை உண்டாக்கும் ஒரு வைரஸ் கிருமி ஆகும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்தது

மல்லியில் பைட்டோ நியுட்ரியன்ட் குணங்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்களும் அடங்கியிருக்கிறது. உடலில் உள்ள இயக்க உறுப்புகளுக்கு எதிராக போராடும் திறனை உடலுக்கு கொடுக்கிறது. மல்லியில் லினானில் மற்றும் கேரினில் அசிட்டேட்  ஆகிய மணமூட்டிகள் உள்ளன. இவை மல்லியின் மருத்துவ தனித்துவத்திற்கு முக்கிய காரணங்களாக இருக்கிறது. உடல் செல்களைப் பாதுகாக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் தன்மை இந்த மூலக்கூறுகளால்தான் தனியாவிற்கு கிடைக்கிறது.

சர்க்கரை அளவை கட்டுபடுத்தும்

தனியா அல்லது மல்லிப் பொடியை உணவில் சேர்த்து கொண்டால் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் என்று பல மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இன்றைய நவீன துரித உணவுகளால் பரவலாக பெரும்பாலானோருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. தனியா அல்லது மல்லிப் பொடியை உட்கொண்டால் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.

முகத்தை பொலிவுற வைக்கும்

மல்லியில் பைடோந்யூட்ரியெண்ட் குணங்கள் உள்ளதால் அது பல்வேறு மருத்துவ பயன்களை நமக்கு அளிக்கிறது. உடல்நல பலன்களை தவிர மல்லிப் பொடி பருக்களை நீக்கவும், முகத்தை பளிச்சிட வைக்கவும் பெரிதும் உதவுகிறது. மல்லிப் பொடியையும் மஞ்சளையும் அல்லது மல்லி சாற்றை பயன்படுத்தி வந்தால் பருக்களை குறைக்கலாம். 

தனியாவின் பயன்கள்


கொலஸ்ட்ரால் குறையும்

மல்லியை பொடி அல்லது கொட்டை வடிவாக உட்கொண்டால் அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.

மாதவிடாய் வலிகளை குறைக்கும்

மாதவிடாயின் போது பெண்களுக்கு அதிக வலியும், ரத்தபோக்கும் ஏற்படும். மாதவிடாயின் போது இரத்த கசிவு அதிகமாக இருந்தால் மல்லிப் பொடியை அல்லது மல்லி விதையை வெந்நீரில் போட்டு சாப்பிட்டு வந்தால் வயிற்று வலியை குறைக்கும்.

நமது அன்றாட உணவுகளில் மல்லி (தனியா) போன்ற ஆரோக்கியமான மசாலாக்களை சேர்த்து வந்தால் நோய்கள் ஏற்படாமல் தடுத்து நமது உடலை ஆரோக்கியமாக வைக்கலாம்.

Previous Post Next Post