-->

ஜாதிக்காய் பயன்கள் மற்றும் நன்மைகள்


ஜாதிக்காய் 

ஜாதிக்காய் ஓரு அறிய மற்றும் பல்வேறு நற்குணங்கள் கொண்ட கொட்டை வகையை சேர்ந்த ஒரு வகை மூலிகையாகும். அதிகக் காரமும் துவர்ப்புத் தன்மையும் கொண்டது. அன்றாட வாழ்வில் இதன் பலன்கள் ஏராளம். இதனை சரியான முறையில் பயன் படுத்தி வந்தால், அதனால் உண்டாகும் நன்மைகள் எண்ணிலடங்காதவையாக இருக்கும். ஜாதிக்காய் ஆங்கிலத்தில் ‘nutmeg’ என அழைக்கபடுகிறது.
ஜாதிக்காயில் இருந்து எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. 

மேலும் இது உணவு பொருட்கள், குறிப்பாக மசாலா பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இது பாரம்பரியமாக மருத்துவத்தில், குறிப்பாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

ஜாதிக்காய் மருத்துவம்

ஜாதிக்காயின் கனி, ஊறுகாய் செய்ய பயன்படும். இதன் உள்ளே இருக்கும் விதைதான் ஜாதிக்காய். கனிக்கும் விதைக்கும் இடையே விதையைச் சூழ்ந்திருக்கும் மெல்லிய தோல் போன்ற பகுதிதான் ‘ஜாதிபத்திரி’. இதில் விதையும் ஜாதிபத்திரி இதழும்தான் மணமும் மருத்துவக்குணமும் கொண்டவை.

ஜாதிக்காய் மருத்துவ பயன்கள்


1. விந்து முந்துதலை தவிர்க்க பல்வேறு மூலிகைகள் உள்ளன, அதில் மிகவும் முக்கியமான மூலிகை ஜாதிக்காய்.  தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்கள் ஜாதிக்காய் தொடர்ந்து உபயோகித்தால் போதும், தாம்பத்திய பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

2. ஜாதிக்காய் இது உடலில் ஒருவித வேதியல் மாற்றத்தை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.

3. ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள  தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது விரைவில் மறையும். முகம் பொலிவடையும். ஜாதிக்காயை அரைத்து பசை போல செய்து தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் தடவி வந்தால் சரும வியாதிகள் மறையும்.

4. ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி 5 கிராம் அளவு சூரணத்தை காலை, மாலை பசும் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும், நரம்புதளர்ச்சியை போக்கும். நீர்த்துப் போன விந்தினை கெட்டிப்படுத்தும். உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

5. ஜாதிக்காய், சுக்குத்தூள் இரண்டையும் சம அளவு எடுத்து, அதற்கு இரண்டு பங்கு சீரகத்தைச் சேர்த்துப் பொடி செய்து, உணவுக்கு முன்னதாக சிறிது சாப்பிட்டு வந்தால், வயிற்றில் ஏற்படும் வாயுத்தொல்லை மற்றும் அஜீரணம் நீங்கும். மேலும், வைரஸ், பாக்டீரியா காரணமாக வரும் அத்தனை வயிற்றுப் போக்குகளுக்கும் ஜாதிக்காய்த் தூள் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.

6. ஜாதிக்காய் நரம்பு மண்டலத்தை தூண்டுவதால், மனநோய்க்கும், மனதை உற்சாகப்படுத்தவும், நினைவாற்றலைப் பெருக்கவும், மனதை பரபரப்பிலிருந்து விடுவிக்கவும் ஜாதிக்காய் உதவும்.

7. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ரத்தப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கவும் ஜாதிக்காய் சிறப்பாக செயலாற்றுவதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.

8. அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை பொடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மை நோயால் ஏற்பட்டால் உடலில் ஏற்பட்ட கொப்புளங்கள் விரைவில் ஆறும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.


9. ஜாதிக்காயும் கிராம்பு போன்றே ஒரு நறுமணப் பொருள் தான். இதுவும் பல் பிரச்சனை, அல்சீமியர் போன்றவற்றை சரிசெய்வதோடு, ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது. 

10. ஜாதிக்காய் பசியின்மையை போக்கும் ஒரு சிறந்த பொருளும் கூட. பெரும்பாலும் இது நிறைய நாட்டு மருந்துகளில் கிடைக்கிறது.


Previous Post Next Post