-->

கடுகின் மருத்துவ நன்மைகள்


கடுகு

கடுகு  என்பது கடுகு செடியில் இருந்து கிடைக்கும் ஒரு சிறிய, உருளை வடிவ விதையாகும். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடுகு பயன்பாட்டில் உள்ளது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழி உண்டு. அதுபோல கடுகு ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில், முதல் இடம் கடுகிற்கு தான் உண்டு. அதனால் தான் எல்லா குழம்பு வகைகளிலும், பதார்த்தங்களிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள்.

கடுகு நன்மைகள்


கடுகின் வகைகள்

கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகைகள் உண்டு. இது இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் அதிகமாக இருக்கும். இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும்.

கடுகின் குணங்கள்

கடுகு இருமலுக்கு மிக சிறந்த மருந்தாகும். கடுகு காரம் மிக்கது, உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. காய்ச்சலை தணிப்பதுடன் வலியை குறைக்கும். வீக்கத்தை கரைக்கிறது.

கடுகுக்கு என்று தனி சுவை கிடையாது . குளிர்ந்த நீருடன் சேரும் போது, அதன் மேல் தோல் அப்புறப்படுத்தப்பட, மைரோஸினேஸ் எனப்படும் நொதி (enzyme) வெளிப்படுகிறது. இதுவே கடுகின் தனிப்பட்ட சுவைக்கு காரணம். இந்திய சமையலில் சூடான எண்ணெயில் கடுகு பொரிக்கும்போது, அதன் மேல் தோல் அகற்ற படுகிறது. மேலை நாடுகளில் கடுகை பொடியாக அரைத்தோ அல்லது அரைத்த விழுதாகவோ அல்லது ரெடிமேட் எனப்படும் முன்பாகவே தயார் செய்யப்பட்டதையே உணவில் பயன்படுத்துகிறார்கள்.

கடுகில் உள்ள சத்துக்கள்

கடுகில் செலினியம், மெக்னீசியம், கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவை மிகுதியாக காணப்படுகிறது. மேலும் போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற, பி- காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் இதில் உள்ளன.

கடுகின் மருத்துவ பயன்கள்

கட்டிகள் கரையும்

கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது, இதனால் கட்டிகள் விரைவில் கரைந்து புண் விரைவில் ஆறும். கடுகு விதைகளில், உடலுக்கு தேவையான எண்ணெய் சத்துக்கள் உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளன.

உடல் பருமன் குறையும்

கடுகு அதிக கலோரி ஆற்றலை தரக்கூடியது. 100 கிராம் கடுகில், 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது. இது கெட்ட கொழுப்பை குறைத்து, உடல் பருமன் அடைவதில் இருந்து பாதுகாக்கும்.

எலும்புகள் உறுதியாகும்

நியாசின் ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்திக்கும் உதவி புரிகின்றன.

கடுகின் பயன்பாடுகள்


ரத்த அழுத்தம் கட்டுப்படும்

ஒரு பாத்திரத்தில் சிறிது தேன் விடவும். இதனுடன் லேசாக வறுத்து பொடி செய்த கடுகை சேர்த்து சூடுபடுத்தினால் இளகிய பதத்தில் வரும். இது ஆறியவுடன் சுண்டைக்காய் அளவுக்கு எடுத்து சாப்பிட்டால் இருமல் கட்டுக்குள் வரும். ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
Previous Post Next Post