-->

உடலுக்கு நன்மை செய்யும் மிளகாய்


மிளகாய்

காரசாரமான உணவிற்கு முக்கிய காரணியாக இருப்பது மிளகாயாகும். நமது சமையலில் மிளகாய்க்கு என்று எப்போதும் சிறப்பான இடம் உண்டு. மிளகாய் காய்கறி வகைகளில் ஒன்றாகும். இது மொளகாய், முளகாய் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மிளகாய் காரத்தை அதிகரிக்க உணவிலும் மருந்துகளிலும் பழங்காலம் முதலே பயன்படுத்தப்படுகிறது. பச்சை மிளகாயின் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் இந்தியா முன்னணியில் உள்ளது.

மிளகாய் மருத்துவ பயன்கள்


மிளகாய்கள் வளர்வதற்கு உகந்த காலம் பருவமழைக்காலம்தான். சில மாதங்களிலேயே மிளகாய்கள் பறிப்பதற்கு தயாராகிவிடும். முதல் பருவம் பறிக்கப்படும் மிளகாய்கள் பச்சை நிறத்துடன் இருக்கும். அடுத்த பருவ மிளகாய்கள் கொஞ்சகொஞ்சமாக சிவப்பு நிறமாக மாறவிடுவார்களாம். இறுதிப்பருவத்தில் பறிக்கப்படும் மிளகாய்கள் வெயிலில் நன்கு காயவைத்து காய்ந்த மிளகாய்களாக கடைகளில் கிடைக்கின்றன.

மிளகாய் வகைகள்

குடை மிளகாய், பிமென்டோ மிளகாய், ரெல்லானோ மிளகாய், இனிப்பு பனானா மிளகாய், பொப்பிலானோ / ஆன்சோ மிளகாய், பெர்முடா கார மிளகாய், ஆர்டேகா மிளகாய், பப்பிரிகா மிளகாய், கார பனானா மிளகாய், ரோகோடில்லோ மிளகாய, அலபீனோ மிளகாய், கயன் மிளகாய், டபாஸ்கோ மிளகாய், செர்ரானோ மிளகாய், சில்டிபின் மிளகாய், ஆபெர்னரோ மிளகாய், ரொகோடோ மிளகாய், தாய்லாந்து மிளகாய்.

இந்திய மிளகாய் வகைகள்

சன்னம் மிளகாய், LC 334 மிளகாய், படகி மிளகாய், அதிசய கார மிளகாய், ஜுவலா மிளகாய், குண்டூர் மிளகாய், காஷ்மீரி மிளகாய், பையடாகி மிளகாய், காந்தரி மிளகாய் மற்றும் முண்டு மிளகாய். உலகின் மிகக் காரமான சிவப்பு மிளகாய் வகையின் பெயர் கரோலினா ரீப்பர் என்னும் வகையாகும்.

மிளகாய் வடிவங்கள்

இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வடிவங்களை கொண்டது. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது. மிளகாய் சமையலுக்கும், கனிந்த பழங்கள் மற்றும் விதைகள் நறுமணப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.

இத்தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோடினாய்டுகள், பிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் ஸ்டிராய்டல், சபோனின்கள், கெப்சைசிடின்ஸ் போன்றவை பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

மிளகாய் மருத்துவ குணங்கள்

கிருமி நாசினியாக செயல்படுகிறது

மிளகாய் ஜீரணத்தை ஊக்குவித்து உடலுக்கு வலுவாக்கிறது. தசைக்குடைச்சல் மற்றும் தலைவலியை போக்கும் தன்மை கொண்டது. இது சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. வியர்வை மற்றும் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது.

ரத்த ஓட்டத்தை சரி செய்கிறது

மிளகாய் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவுகிறது. உடல் முழுவதற்கும் ரத்த ஓட்டத்தினை சரி செய்கிறது. மிளகாயில் உள்ள கெப்சைசின் எனும் வேதிப்பொருள் இத்தன்மைக்கு அடிப்படை காரணமாகிறது.

தோல் வியாதிகள் ஏற்படாமல் தடுக்கிறது

தோல்களின் மீது தடவும் போது நரம்பு நுனிகளின் உணர்வினை மழுங்கச் செய்து ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது. தோல் வியாதிகளான சொரியாசிஸ், நியூரால்ஜியா மற்றும் தலைவலி, மூட்டுவலி, ஆகியவற்றை போக்குகிறது.

ஜீரண மணடலத்தை சரியாக செயல்பட வைக்கிறது

பக்டீரியக்களுக்கு எதிராக செயல்புரிகிறது. உள்ளுக்கு சாப்பிடும் போது வயிற்றுவலி, வாயு கோளாறு போன்றவற்றை தீர்க்கும். ஜீரண சுரப்பிகளை சுரக்க தூண்டும். ஜீரண மண்டல நோய்களைப் போக்கும்.


தொண்டை கரகரப்பை சரிசெய்கிறது

சர்க்கரை மற்றும் குல்கந்த் சேர்த்து முக்கோண வில்லைகளாகச் செய்யப்பட்டு தொண்டை கரகரப்புக்கு மருந்தாகிறது. தொண்டை வலிகளைப் போக்க தேய்ப்புத் தைலமாக பயன்படுகிறது.

மிளகாய்


குடலை சுத்தப்படுத்துகிறது

மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் எண்டார்ஃபின் என்கிற ஹார்மோன் சுரப்பு தூண்டப்படுகிறது. அதனால், மனதிற்கு ஓய்வு கிடைக்கிறது. மிளகாய் சேர்த்த உணவு, குடலை சுத்தப்படுத்தி உடலை லேசாக்கும் திறன் கொண்டது.

சரும தொற்றுகளை தடுக்கிறது

பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அதிகம் நிரம்பியுள்ளது. இந்த குணத்தினால் உடலில் தொற்றுக்கள் ஏற்படாமல் உடலை காக்கிறது. அதுவும் முக்கியமாக சரும தொற்றுகள் ஏற்படாமல் உதவி புரிகிறது. பச்சை மிளகாயில் விட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது சில சருமம் எண்ணெய் சுரப்பதற்கு உதவி புரியும்.

கொழுப்புகளை கரைக்கும்

உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் உடலின் கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும்.
Previous Post Next Post