மிளகு
மிளகு ‘கறுப்பு தங்கம்’ என்று அழைக்கபடுகிறது. மிளகின் நன்மைகளை பற்றித் தெரியாதவர்களே இருக்க
முடியாது. சமையலில் மட்டும் அல்லாமல்,
மருத்துவத்திலும் இதன் பயன்பாடு அதிகம் உள்ளது. நம் நாட்டு உணவுகளில்
மட்டும் அல்லாமல், உலகில் பெரும்பாலும் சமைக்கக் கூடிய அனைத்து
உணவுகளிலும் மிளகு முக்கிய பொருளாக இடம் பெற்றிருக்கிறது. மிளகு சமையலுக்கு நல்ல மணத்தையும், சுவையையும்
தருகின்றது.
மிளகு வளரியல்பு
மிளகு 'பைப்பரேசியே' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த,
பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையை சேர்ந்த ஒரு செடியாகும்.
மிளகு செடியின் கொடியில் கனிகள் காய்ந்தவுடன் சிறந்த நறுமணத்தை பரப்பும். பின்பு
கனிகள் பறிக்கபட்டு காய வைத்து பயன்படுத்தபடுகிறது. மிளகின் கொடி, இலை மற்றும் வேர் முதலியன பயன் தரும் பாகங்களாகும். உலகிலேயே கேரள
மாநிலத்தில்தான் மிளகு அதிகம் உற்பத்தியாகின்றது.
மிளகின் வரலாறு
மிளகிற்கு என்று
பல்வேறு சுவாரசியமான வரலாற்று தகவல்கள் உள்ளது. பண்டைய காலத்தில் கேரளாவில்
இருந்து அரபிக்கடல் வழியாக மிளகு அரேபியாவிற்கு ஏற்றுமதியானது. அங்கிருந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. ஐரோப்பியர்கள் நம் நாட்டின் மிளகு
மற்றும் நறுமணப் பொருட்கள் மீது அதிக நாட்டம் கொண்டனர். அதனால் கடல் வழியாக
இந்தியாவை தேடிக் கண்டுபிடித்தனர். மிளகை வாங்க வந்தவர்கள் படிப்படியாக
வியாபாரத்தை விரிவுபடுத்தி நம் நாட்டையே பிடித்து நம்மை கொண்டனர்.
மிளகில் அடங்கியுள்ள சத்துக்கள்
100 கிராம் மிளகில் உள்ள சத்துக்கள்,
ஆற்றல் - 225 கலோரிகள், கார்போஹைட்ரெட்
– 64.81 கி, புரதம் – 10.95 கி, கொழுப்பு
– 3.26 கி, நார்சத்து – 26.5 கி, வைட்டமின்
A - 299 IU,
தியாமின் - 0.109 மி.கி, ரிபோஃப்ளேவின்
- 0.240 மி.கி, நியாசின் - 1.142 மி.கி,
வைட்டமின் C - 21 மி.கி, வைட்டமின் E - 4.56 மி.கி, வைட்டமின் K -
163.7 மி.கி, சோடியம் - 44 மி.கி, பொட்டாசியம்
- 1.25 கி, கால்சியம் - 437 மி.கி, தாமிரம்
- 1.127 மி.கி, இரும்பு - 28.86 மி.கி,
மெக்னீசியம் - 194 மி.கி, மாங்கனீசு: 5.625 மி.கி, பாஸ்பரஸ் - 173 மி.கி,
துத்தநாகம்: 1.42 மி.கி.
மிளகு வகைகள்
மிளகில் கருமிளகு
மற்றும் வால் மிளகு என முக்கியமான இரு வகைகள் உண்டு. மிளகின் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும்,
உணவிற்கு சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும்
பயன்படுத்தப்படுகிறது. மிளகில், அது பதப்படுத்தப்படும்
முறைக்கேற்ப கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு
மிளகு, பச்சை மிளகு எனப் பலவகை உண்டு. மிளகிற்க்கு குறுமிளகு
மற்றும் கோளகம் என்ற பெயர்களும் உண்டு.
மிளகின்
காரத்தன்மை அதிலுள்ள பெப்பரைன் என்ற வேதிப்பொருளால் உருவாகிறது. பொடியாக்கப்பட்ட
மிளகை உலகின் அனைத்து நாடுகளின், சமையலறைகளிலும காணலாம்.
மிளகின் ஆரோக்கிய குணங்கள்
செரிமான
உறுப்புகளின் செயல்திறனை கூடும்
நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல
உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டுகிறது. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும்
ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.
நஞ்சை முறிக்கும்
‘பத்து மிளகு
இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்’ என்பது பழமொழி. உணவில் உள்ள
விஷத்தை முறிக்கும் தன்மை மிளகிற்கு உண்டு.
செரிமானத்திற்கு உதவி புரிகிறது
மிளகு உடலின் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து, செரிமானத்திற்கு துணைபுரிகிறது. மேலும் இருமல்,
தொண்டை கரகரப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கும்,
மிளகு நல்ல தீர்வாக அமைகிறது.
அறிவாற்றல் அதிகரிக்கிறது
மிளகில்
இருக்கும் பெப்பரைன் மூளையின் அறிவாற்றல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இதனால்
நினைவாற்றல் அதிகரிக்கிறது. மேலும் மூளை
நல்ல செயல்திறனை பெற்று வயதாகாமல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகின்றது. இதன்
விளைவாக அல்சைமர், பார்கின்சன் நோய் மற்றும்
முதுமை அடைதல் போன்றவை தடுக்கப்படுகிறது.
இரத்த கொதிப்பை குறைக்கும்
மிளகில்
இருக்கும் பெப்பரைன் என்ற பொருள் இரத்த கொதிப்பை சீரான அளவில் வைத்திருக்க உதவும்.
மேலும் பெப்பரைன் மஞ்சளில் இருக்கும் குர்குமின் போன்ற பொருட்களை உடலுக்குத்
தேவைப்படும் அளவு எடுத்துக் கொள்ளும் பண்பை கொண்டதால், நல்ல பலங்கள் உடல் பெற உதவுகின்றது.
சளி இருமலை போக்கும்
5000 ஆண்டுகளுக்கு முன்பே
மிளகு பல உடல் நல பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது என முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைக்கு உடனடி தீர்வு பெற மிளகு உதவுகின்றது.
மிளகுடன் தேன் கலந்து எடுத்துக் கொள்ளும் போது இருமல் மற்றும் சளிக்கு உடனடி நிவாரணம்
கிடைக்கின்றது.
நெஞ்சு சளி நீங்கும்
மிளகுத்தூளுடன்
தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும்.
பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர்
சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் நெஞ்சு சளி கட்டுதல் நீங்கும்.
உடல் எடையை குறைக்கும்
மிளகு உடல்
எடையை குறைக்க உதவுகிறது. இது வயிற்று தசைகளிலும், உடலின் உள்ள பிற பகுதிகளிலும் கொழுப்பு சேராமல், தடுக்க
உதவுகிறது. இதனால், உடல் எடை அதிகரிப்பது குறைக்கபட்டு சீரான
உடல் எடை பெற உதவுகிறது.
சுவாச பிரச்சனைகள் தீரும்
மிளகு, சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகிறது. மேலும் சுவாச
குழாயில் இருக்கும் அடைப்பை நீக்கி, சைனஸ் மற்றும்
மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகின்றது.
மல சிக்கல், மற்றும் வயிற்று போக்கு குணமாகும்
மிளகு உடலில் ஹைட்ரோகுளோரிக்
அமிலம் மற்றும் பிற செரிமான அமிலங்கள், அதிக அளவு சுரக்க
உதவுகின்றது. இவை, உணவு பொருட்களை எளிதாக ஜீரணமாக
உதவுகின்றது. மேலும் மல சிக்கல், மற்றும் வயிற்று போக்கு
போன்ற பிரச்சனைகளும் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் மிளகு வயிற்றில் இருக்கும் வாயு
பிரச்சனையை தீர்க்க உதவுகிறது.
ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது
மிளகிலுள்ள
ஆஸ்துமா எதிர்ப்பு பண்புகள் எளிதாக ஆஸ்த்மா பிரச்சனைகள் வராமல் தடுக்கும். மேலும்
சுவாச குழாயை சுத்தமாக்கி சுவாசத்தை எளிதாக்கும்.
நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது
மிளகிலுள்ள பாக்டீரியா
எதிர்ப்பு குணங்கள், நோய்களை எதிர்த்து போராட உதவுகின்றது.
இதனால் நோய் பரவுவது குறைந்து, விரைவில் குணமடைய
உதவுகின்றது.
கண் பார்வை தெளிவாகும்
மிளகு கண்
பார்வை தெளிவடைய பெரிதும் உதவுகின்றது. மிளகை நெய்யுடன் சேர்த்து உணவோடு
சாப்பிட்டு வந்தால், கண்களின் ஆரோக்கியம்
அதிகரிக்கும்.
பற்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும்
மிளகில்
இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் பக்டீரியாக்கள் தாக்கத்தை தடுத்து பற்களில்
வலி ஏற்படாமல் தடுக்கிறது. பற்கள் மற்றும் வாய் சம்பந்தமான எந்த நோய்க்கும் மிளகு
ஒரு நல்ல தீர்வாக உள்ளது.
புற்றுநோயை தடுக்க உதவுகிறது
மிளகில்
இருக்கும் பெப்பரைன் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும் இதிலுள்ள செலெனியம், குர்குமின், பீட்ட கரோடீன் மற்றும் வைட்டமின் B
போன்றவை குடல் பகுதிகளில் உள்ள அசுத்தங்களை நீக்குகிறது. இதனால்
குடல் மற்றும் வயிற்று பகுதிகளில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.