-->

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை அமைப்பு

ஆயில்யம் நட்சத்திரம் வாழ்க்கை முறை


ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்


நட்சத்திரம் : ஆயில்யம்
ஆயில்யம் நட்சத்திரத்தின் ராசி : கடகம்
ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிபதி : புதன்
ஆயில்யம் நட்சத்திரத்தின் ராசி அதிபதி : சந்திரன்

ஆயில்யம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :

ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிபதி புதன். நட்சத்திராதிபதி புதன் என்பதால் இவர்களுக்கு இயற்கையாகவே நல்ல பேச்சாற்றலும் கல்வி அறிவும், சகல வித வித்தைகளையும் அறிந்து கொள்ள கூடிய ஆர்வமும் இருக்கும். அழகான கண்களை கொண்டவர்கள்.

மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்வார்கள். வாழ்வில் வெற்றி பெற கடுமையான உழைப்பை வெளிபடுத்த தயங்க மாட்டார்கள். பிறர் மேல் ஆதிக்கம் செலுத்த கூடியவர்கள். நயம்பட பேசுவதில் வல்லவர்கள். சிறந்த அறிவாற்றல் கொண்டவர்கள். மன வலிமையையும், உடல் வலிமையும் ஒருங்கே பெற்றவர்கள்.

இவர்களுக்கு எந்த பிரச்சனையையும் எதிர் கொள்ள கூடிய துணிவிருக்கும். தனக்கு சரியென பட்டலொழிய மற்றவர்களின் ஆலோசனைகளை அவ்வளவு எளிதில் ஏற்க மாட்டார்கள். இவர்களின் வயதை தோற்றத்தை கொண்டு எடை போட முடியாது. இயற்கையை அதிகம் நேரிப்பவர்கள். இவர்களுக்கு பயணங்களில் அதிக ஆர்வம் உண்டு. ஒரே நேரத்தில் இரண்டு காரியங்களை செய்ய கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.

எதிரிகளை கண்டு அஞ்சமாட்டார்கள். இவர்களிடம் ஒரு வேலையை ஒப்படைத்தால் அதை முடிக்கும் வரை ஓய மாட்டார்கள். நியாய தர்மங்களை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பார்கள். சற்று மந்த குணம் இருக்கும்.

ஆயில்யம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :

மிகுந்த சொல்வன்மை உள்ளவர். நல்லஅறிவுடையவர், எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்ற விருப்பம் உடையவர், பலவிதமான செயல்களைச் செய்பவர். இவர்கள் புகழ்ச்சியை அதிகம் விரும்புவார்கள்.

ஆயில்யம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் தவறே செய்தாலும் அதை நியாயபடுத்தி பேசுவார்கள். இவர்கள் சுகமாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். பிறர் தனக்கு இடும் வேலைகளை சரியாக செய்வார்கள். 

ஆயில்யம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் காரணமே இல்லாமல் அடிக்கடி கோபப்படுவார்கள். கோபம் இவர்களின் சுபாவமாக இருக்கும். எல்லா செயல்களையும் அராய்ந்து பார்க்கும் குணம் இருக்கும். தான் சொல்வதே சரி என வாதம் செய்வார்கள்.

ஆயில்யம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் கஷ்டப்பட்டு உழைப்பதில் விருப்பம் இல்லாதவர்கள். புத்திசாலிகள். எல்லா விஷயங்களையும் எதிர்மறை கண்ணோட்டதுடனே அணுகுவார்கள். எந்த விஷயத்தையும் திட்டமிட்டு செய்ய மாட்டார்கள்.

மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும் 

Previous Post Next Post