-->

கடக ராசியின் பொதுவான குணம்

கடக ராசி குணங்கள்


கடக ராசியின் பொதுவான குணங்கள்


கடக ராசியின் அதிபதி சந்திர பகவானாவார். கடக ராசியில் புனர்பூசம் நட்சத்திரத்தின் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும் இதில் அடங்கும். கடக ராசிக்காரர்கள் பெரியோர்களிடத்தில் மிகுந்த மரியாதை கொண்டிருப்பார்கள். கடவுள் பக்தி அதிகம் இருக்கும். நல்ல அழகான மற்றும் வசீகரமான தோற்றத்தை கொண்டிருப்பார்கள். ஆபார ஞாபக சக்தியும், அறிவாற்றலும் கொண்டிருப்பார்கள்.

கடக ராசிக்காரகள் எதில் கைவைத்தாலும் அதை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள். இவர்களுக்கு ஆளுமைத்தன்மை அதிகம் இருக்கும். பிறரை தன் பால் கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்டவர்கள். ஏற்று கொண்ட வேலையை முடிக்காமல் விட மாட்டார்கள். சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற வேண்டும் என விரும்புவார்கள். இவர்களால் தன் சகோதர, சகோதரிகளுக்கே லாபமே தவிர அவர்களால் இவர்களுக்கு லாபம் கிடையாது.

இவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள். எல்லா விஷயத்தையும் எளிதில் உள்வாங்கி கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு இயற்கையாகவே உண்டு. இரக்க குணம் அதிகம் கொண்டவர்கள். எளிதில் உணர்ச்சி வசபடகூடியவராகவும், அதனால் வருந்துபவராகவும் இருப்பார்கள். பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்கள். கள்ளம் கபடம் இல்லாத வெகுளியான மனது கொண்டவர்கள்.

கடக ராசிகார்க்களுக்கு குடும்பத்தின் மீது அதிக அக்கறை உண்டு. குடும்பத்திற்காக எதையும் விட்டு கொடுப்பார்கள். சுகபோகமான வாழ்க்கை வாழ ஆசைபடுவார்கள். எந்த நேரத்திலும் யாருடைய பணமாவது இவர்கள் கைகளில் இருந்து கொண்டே இருக்கும். இவர்களிடம் சேமிக்கும் பழக்கம் குறைவாக இருக்கும். வெளியூர், வெளிநாடுகளில் சென்று பணம் ஈட்டுவார்கள். பொது காரியங்களுக்கு செலவு செய்ய தயங்க மாட்டார்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் இவர்கள் கவனமுடன் இருபது நல்லது.

கடகராசி புனர்பூசம் நட்சத்திரம், கடகராசி பூசம் நட்சத்திரம், கடகராசி ஆயில்யம் நட்சத்திரம், ஆகியவற்றின் பொதுவான குணங்களை அறிய மேலே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.




Previous Post Next Post