-->

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை அமைப்பு

பூசம் நட்சத்திரம் வாழ்க்கை முறை


பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்


நட்சத்திரம் : பூசம்
பூசம் நட்சத்திரத்தின் ராசி :  கடகம்
பூசம் நட்சத்திரத்தின் அதிபதி : சனி
பூசம் நட்சத்திரத்தின் ராசி அதிபதி :  சந்திரன்

பூசம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :

இவர்கள் எந்த பிரச்சனையையும் கண்டு பயப்படமாட்டார்கள். அந்த பிரச்சனையை அலசி ஆராய்ந்து அதற்காண தீர்வை கண்டு பிடிக்காமல் விடமாட்டார்கள். இவர்கள் எல்லாவிதமான நெருக்கடியையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். மற்றவர்களை கவரக்கூடிய ஆற்றலை பெற்று இருப்பார்கள்.

மற்றவர்களுக்கு செய்வதற்கு கஷ்டமாக இருக்கும் விஷயங்களை கூட இவர்கள் மிக எளிமையாக முடித்து காட்டுவார்கள். இவர்கள் மனசாட்சிப்படி நடக்க வேண்டும் என நினைப்பவர்கள். விரும்தோம்பலில் சிறந்தவர்கள். வாசனை திரவியங்களை அதிகம் விரும்புவார்கள். சகல விஷயங்களையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள்.

இவர்கள் அழகான முகம் அமைப்பை கொண்டவர்கள். உற்சாகமான மனநிலையை கொண்டிருப்பார்கள். பெரியோர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வார்கள். எல்லா செயல்களிலும் வைராக்கியத்தோடு ஈடுபட்டு வெற்றி கொடியை நாட்டுவார்கள்.

பூசம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓய மாட்டார்கள். நீதி, நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்களிடம் தலைமை தாங்கும் பண்பு அதிகம் இருக்கும். இவர்கள் நீண்ட ஆயுளை உடையவர்.

பூசம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் அந்நியரிடம் நட்பாக இருப்பார்கள். இவர்களிடம் கோவமும், குணமும், சேர்ந்தே இருக்கும். இவர்களில் பலர் அழகாக இருப்பார்கள். எல்லோரிடமும் நட்பாக பழகுவார்கள். எச்செயலையும் நிதானமாக செய்யும் பழக்கமுடையவர்.

பூசம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் அண்டை அயலாரிடமும், சொந்தகாரகளிடமும் அன்பாக இருக்க விரும்புவர். நினைத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். பிறரை வழி நடத்தி செல்லும் ஆற்றல் அதிகம் இருக்கும். இவர்கள் தெய்வ பக்தி அதிகம் கொண்டவர்கள்.

பூசம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்களுக்கு பொருளீட்டுவதில் அதிக ஆர்வம் இருக்கும். எந்த விலை கொடுத்தாலும் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற குணம் கொண்டவர்கள். சுயநலம் அதிகம் கொண்டவர்கள்.

மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும் 
Previous Post Next Post