-->

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை அமைப்பு

புனர்பூசம் நட்சத்திரம் வாழ்க்கை முறை

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்


நட்சத்திரம் : புனர்பூசம்
புனர்பூசம் நட்சத்திரத்தின் இராசி :
 மிதுனம் மற்றும் கடகம்
புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதி :
 குரு
புனர்பூசம் நட்சத்திரம் முதல் இரண்டு, மூன்று பாத ராசி அதிபதி (மிதுனம்)
 : புதன்
புனர்பூசம் நட்சத்திரம் நான்காம் பாத ராசி அதிபதி (கடகம்) :
 சந்திரன்

புனர்பூசம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

பகவான் ஸ்ரீ ராமர் அவதரித்தது இந்த நட்சத்திரத்தில் தான். மற்றவர்களிடம் நட்பாக பழகுவர். இவர்கள் பொய் பேசுவதை விரும்பமாட்டார்கள். எக்காலத்திலும் செய்நன்றியை மறக்காதவர்கள். தன்னால் முடிந்த அளவுக்கு பிறருக்கு நன்மை செய்வார்கள். சர்வ லட்சணங்களும் பொருந்தியவராய் இருப்பார்கள்.

சட்ட திட்டங்களை மதித்து நடப்பார்கள். இவர்களுக்கு தன்மானம் அதிகம் இருக்கும். யாரிடமும் கையேந்தி நிற்க மாட்டார்கள். தெய்வ பக்தி அதிகம் இருக்கும். மற்றவரை எடை போடுவதில் வல்லவர்கள். இவர்களிடம் கற்பனை சக்தி அதிகம் இருக்கும். படிப்பறிவு, எழுத்தறிவை விட இவர்களுக்கு அனுபவ அறிவு அதிகம். யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள்.

இவர்கள் சிக்கனமாக இருக்க விரும்புவார்கள். இவர்களுக்கு பேச்சுதிறமை அதிகம் இருக்கும். எல்லாவற்றையும் வெளியில் சொல்லாமல் மனதில் பூட்டி வைத்து கொள்வார்கள். பிறர் தனக்கு செய்த உதவியை எப்போதும் மறக்க மாட்டார்கள். பொதுவாக நல்லதையே நினைப்பார்கள், மற்றும் நல்லதையே செய்வார்கள்.

புனர்பூசம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் பெரும்பாலும் பருமனான உடலமைப்பை பெற்றவர்கள். இவர்கள் குடும்பத்தினர் மேல் பாசமும், அதே சமயம் கண்டிப்புடனும் நடந்து கொள்வார்கள். இவர்களை பேசி ஜெயிப்பது மிக கடினம்.

புனர்பூசம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் உஷ்ண தேகத்தை கொண்டவர்கள். மேலும் சோம்பேறியாக இருப்பர். சுகமாக இருக்க விரும்புவார்கள். தன்னை போல மற்றவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். எப்பாடு பட்டாலும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள். 

புனர்பூசம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் நீண்ட ஆயுளை கொண்டவர்கள். அவர்களுக்கு அலைச்சல் அதிகம் இருக்கும். இவர்கள் நல்ல புத்திசாலிகள். கடுமையான உழைப்பாளி. தெய்வ பக்தி அதிகம் இருக்கும். எப்போதும் ஒருவித மன இறுக்கத்துடன் இருப்பார்கள்.

புனர்பூசம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் நல்ல செயல்கள் செய்வதையே குறிக்கோளாக கொண்டவர்கள். இவர்கள் பெரும்பாலோனார் குள்ளமாகவும், நல்ல அழகுடனும் இருப்பார்கள். பார்வையால் மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்கள்.
Previous Post Next Post