-->

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை அமைப்பு



பரணி நட்சத்திரம் வாழ்க்கை முறை


பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்


நட்சத்திரம் : பரணி
பரணி நட்சத்திரத்தின் ராசி : மேஷம்
பரணி நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன்
பரணி நட்சத்திரத்தின் ராசி அதிபதி :
 செவ்வாய்

பரணி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களை கவரக் கூடிய உடலமைப்பும், பேச்சாற்றலும் இருக்கும். தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் தான தர்மங்கள் செய்வார்கள். அழகாக உடை உடுத்துவதிலும், விதவிதமான அணிகலன்களை அணிந்து கொள்வதிலும் இவர்களுக்கு விருப்பம் அதிகம். இவர்களுக்கு நடனம், பாட்டு, இசை ஆகியவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். எதிலும் சிந்தித்து செயல் படும் ஆற்றல் கொண்டவர்கள்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணியை ஆள்வார்கள் என்பது பழமொழி. அந்த பழமொழிக்கு ஏற்ப இவர்களுக்கு சுகமான வாழ்வு அமையும். இவர்கள் மனைவி, பிள்ளைகள், தாய் தந்தை ஆகியோர்களை அதிகம் விரும்புவார்கள். எந்த வேளையில் இருந்தாலும் மற்றவர்கள். பின்பற்றும் வகையில் வழி காட்டியாக இருப்பார்கள். தனக்கு கீழ் உள்ளவர்களை அடிமை படுத்தாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் சாமர்த்தியம் கொண்டவர்கள்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிக காம உணர்வு அதிகம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இவர்களுக்கு அதிக கவனம் இருக்கும். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க கூடிய ஆற்றலை பெற்றிருப்பார்கள். எதிரிகளை மிக சுலபமாக வெற்றி கொள்வார்கள். மேலும் இவர்களுக்கு நன்றியுணர்வு அதிகம் இருக்கும்.

பரணி முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் சிவந்த மேனியை கொண்டிருப்பார்கள். இவர்கள் வீரர்களாகவும் பலசாலியாகவும் இருப்பார்கள். எல்லாம் தனக்கு தெரியும் என காட்டி கொள்வார்கள். இவர்களுக்கு பொறுமை சற்று குறைவு.

பரணி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் ஞானிகளாக இருப்பார்கள். தான் இருக்கும் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். பணம் சேர்ப்பதில் அதிக ஆர்வமுடையவராக இருப்பார்கள். எதிலும் எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள்.

பரணி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் கோபம் அதிகம் உடையவர்களாக இருப்பார்கள். நல்ல உயரமாக இருப்பார்கள். இவர்கள் பிறரை எளிதில் நம்ப மாட்டார்கள்.
இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருக்கும்.

பரணி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்களில் பெரும்பாலனோர் குண்டாக இருப்பார்கள். இவர்களுக்கு கோபம் அதிகம் வரும். தலைமை தாங்கும் பண்பு அதிகம் இருக்கும். இவர்கள் சுயமாக முடிவெடுப்பதில் தயக்கம் கொள்வார்கள். அலங்காரத்திலும், ஆடம்பரத்திலும் அதிக விருப்பம் உடையவர்கள்.


மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும் 

Previous Post Next Post