-->

மேஷ ராசியின் பொதுவான குணம்

மேஷ ராசி குணங்கள்


மேஷ ராசியின் பொதுவான குணங்கள்


மேஷ ராசியின் அதிபதி செவ்வாயாகும். மேஷ ராசியில் அஸ்வினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் ஆகியவை இடம்பெறுகின்றன. மேஷ ராசிக்காரர்கள் பொதுவாக நேர்மையாக இருக்க விரும்புவார்கள். இவர்களுக்கு பொய் பித்தலாட்டம் செய்பவர்களை கண்டால் பிடிக்காது. இவர்களுக்கு  மற்றவர்கள் கஷ்டபடுவதை கண்டால் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டு இருப்பார்கள். உடன் பழகுபவர்களில் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்பதை சுலபமாக கண்டு பிடித்து விடுவார்கள்.

மேஷ ராசியில் பிறந்தவர்கள் நடுத்தர உயரமும், கம்பீரமான தோற்றமும் கொண்டவர்கள். நிமிர்ந்த நேரான நடையும், கணிந்த பார்வையும் கொண்டவர்கள். பிறரின் பார்வைக்கு வெகுளியானவர் போல காட்சியளிப்பார்கள். நல்ல தீர்கமான ஆயுளும்,  தெய்வ பக்தியும் கொண்டு இருப்பார்கள். பொறுமை என்பதே மேஷ ராசிக்காரர்களுக்கு கிடையாது. நினைத்ததை உடனே சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு கொண்டவர்கள். இதனால் சில பிரச்சனைகளையும் சந்திப்பார்கள்.

மேஷ ராசியில் பிறந்தவர்கள் வீரம், கோபம் நிறைந்தவர்களாகவே இருப்பார். மற்றவர்களை அடக்கி ஆட்சி செய்வதிலும், அதிகாரம் செலுத்துவதிலும், வீர தீரமான செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் இருப்பார். பிறரை நிர்வகிக்கும் நிர்வாக திறமையிலும் முதன்மையாக இருப்பார். இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி பேசுவார்கள்.  தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு  எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் உதவி செய்வதற்கு தயாராக இருப்பார்கள். 

இவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் கொண்டவர்கள். தான் சொல்வதே சரி சரி என வாதிடுவார்கள். நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்கள் இவர்கள். இவர்களுக்கு கலைகளில் அதிக நாட்டம் இருக்கும். இவர்கள் தைரியமானவர்கள் என்பதால் எல்லா விஷயத்தையும் சமாளித்து விடும் ஆற்றலை பெற்றிருப்பார்கள். கௌரவத்தை ஒரு நாளும் விட்டு கொடுக்காதவர்கள்.

 
தான் ஏற்றுகொண்ட பணிகளில் எவ்வளவு தடைகள் வந்தாலும் பொறுமையுடன் இருந்து அதை முடித்தும் காட்டுவார்கள். இவர்களுக்கு கோபம் அதிகம் வரும். கோபத்தில் மன அமைதியை இழந்து விடுவார்கள்.
இவர்களில் சிலர் தான் என்னும் அகங்கார குணத்தை கொண்டவர்கள். பிறரை கலந்தாலோசிக்காமல் தானே சுயேச்சையாக முடிவுகளை எடுப்பார்கள்.

மேஷராசி அஸ்வினி நட்சத்திரம், மேஷராசி பரணி நட்சத்திரம், மேஷராசி கிருத்திகை நட்சத்திரம் ஆகியவற்றின் பொதுவான குணங்களை அறிய மேலே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.



Previous Post Next Post