-->

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை அமைப்பு



கிருத்திகை நட்சத்திரம் பலன்கள்



கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்


நட்சத்திரம் : கிருத்திகை
கிருத்திகை நட்சத்திரத்தின் இராசி : மேஷம் மற்றும் ரிஷபம்
கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன்
கிருத்திகை நட்சத்திரம் முதல் பாத ராசி அதிபதி (மேஷம்) : செவ்வாய்
கிருத்திகை நட்சத்திரம் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பாத ராசி அதிபதி (ரிஷபம்) : சுக்கிரன்

கிருத்திகை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

இவர்கள் நல்ல உடல் வலிமையுடனும், புத்திசாலிதனத்துடனும் இருப்பார்கள். இவர்கள் மிகவும் இளகிய குணம் கொண்டவர்கள். இவர்களிடம் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும், எதையும் வெளிப்படையாக பேசும் குணமும் உண்டு. இவர்களுக்கு முன் கோபமும் அதிகம் இருக்கும்.

இவர்கள் ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்கள். தனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கையையே வாழ விரும்புவர்கள். தன்னுடைய சக்திக்கு ஏற்ற வேலையை செய்து முடிப்பார்கள்.இவர்கள் யாரிடமும் விட்டு கொடுத்து போக மாட்டார்கள். இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கும். யாரையும் சட்டை செய்யாமல் தனக்கென்று ஒரு பாதையை அமைத்துக் கொண்டு தனி வாழ்க்கையை வாழ்வார்கள்.

இவர்களிடம் ஆணவமும், கர்வமும் அதிகம் இருக்கும். மிக உயரிய கொள்கையை உடையவர்கள். பயணங்கள் செய்வதில் அதிக ஆர்வம் இருக்கும். சேமிப்பில் அதிக ஆர்வம் இருக்கும். கலைகளை கற்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும். பெண்களிடம் நட்புடன் பழகுவர்.

கிருத்திகை முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் பொன், பொருளை அதிகம் விரும்புவார்கள். நல்ல ஞானம் உள்ளவர்கள். எதையும் தந்திரத்தால் வெல்ல கூடியவர்கள். புகழை விரும்புபவர்கள்.

கிருத்திகை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்:

இவர்கள் அதிக ஆசை, மற்றும் பற்றுள்ளவர்கள். மிக உயரிய நோக்கம் இவர்களிடம் இருக்கும். இவர்களிடம் வீரம் அதிகம் இருக்கும். இவர்கள் தற்புகழ்ச்சி அதிகம் உடையவர்கள்.

கிருத்திகை மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்:

இவர்களிடம் பேராசை அதிகம் இருக்கும். இவர்கள் விடாமுயற்சி அதிகம் உடையவர்கள். இவர்களிடம் கோபம், பொறமை, பழி வாங்கும் பண்பு அதிகம் இருக்கும்.

கிருத்திகை நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்:

பல நல்ல பண்புகளை இவர்கள் கொண்டிருப்பார்கள். தானம், தர்மம் செய்வதில் அதிக விருப்பம் இருக்கும். தெய்வ பக்தியும், இரக்க குணமும் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.
Previous Post Next Post