பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
நட்சத்திரம் : பூரட்டாதி
பூரட்டாதி நட்சத்திரத்தின் இராசி : கும்பம் மற்றும் மீனம்
பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி : குரு
பூரட்டாதி நட்சத்திரம் ஒன்று,இரண்டு, முன்றாம் பாத ராசி அதிபதி (கும்பம்) : சனி
பூரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாத ராசி அதிபதி (மீனம்) : குரு
பூரட்டாதி நட்சத்திரத்தின் இராசி : கும்பம் மற்றும் மீனம்
பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி : குரு
பூரட்டாதி நட்சத்திரம் ஒன்று,இரண்டு, முன்றாம் பாத ராசி அதிபதி (கும்பம்) : சனி
பூரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாத ராசி அதிபதி (மீனம்) : குரு
பூரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
இவர்கள் நியாய அநியாயங்களை தைரியமாக பேசுவார்கள்.
எப்பொழுதும் ஏதாவது சிந்தனை செய்து கொண்டேயிருப்பார்கள். இவர்கள் சரியான முன்
கோபிகள். கோபம் இருந்தாலும் பரந்த மனம் இருக்கும். தன்னை பற்றி யாரும் குறை
கூறுவதை விரும்ப மாட்டார்கள்.
எல்லா பிரச்சனைகளையும் எளிதாக தீர்த்து வைப்பார்கள்
உணர்வுகளை அடக்கி ஆளக்கூடியவர்கள். நல்ல அறிவாற்றலும் பேச்சாற்றலும் இருக்கும்.
குடும்ப வாழ்க்கையில் அக்கறை இல்லாமல் இருப்பார்கள். தாய், தந்தை, மற்றும் குடும்ப
உறுப்பினர்களிடம் அதிக பாசத்துடன் இருப்பார்கள்.
எல்லாம் தெரிந்தாலும் எதையும் வெளிகாட்டி கொள்ள
மாட்டார்கள். பிறர் பேச்சிற்கு
மதிப்பளிப்பார்கள். தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பார்கள். மிகவும் இளகிய மனம்
கொண்டவர்கள். வீண் செலவுகள் செய்ய மாட்டார்கள்.
பூரட்டாதி முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :
இவர்கள் நல்ல பழக்க வழக்கங்களை
கொண்டிருப்பார்கள். நன்றாக அகன்ற முகத்தை கொண்டு இருப்பார்கள். மனைவி,
பிள்ளைகளிடத்தில் அதிக பிரியம் உடையவர்.
பூரட்டாதி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் :
இவர்கள் வாக்குச் சாதுர்யம்
மிகுந்தவர். தெய்வ பக்திக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். உண்மை பேசுவதையே
விரும்புவர். பிறர் மனம் கோணாமல் நடந்து கொள்வர்.
பூரட்டாதி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் :
இவர்கள் சந்தோஷமாக இருப்பதையே
விரும்புவர். நல்ல பொறுமை சாலியாகவும், நன்நடத்தை உள்ளவராகவும் இருப்பர். சமுகத்தில்
பெரிய மனிதர்களிடம் நட்புறவை வைத்திருப்பவர்.
பூரட்டாதி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் :
மற்ற ராசிகளின் பொதுவான குணங்களை இங்கே கிளிக் செய்வதன்மூலம் காணலாம்.
மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.
|