மீன ராசியின் பொதுவான குணங்கள்
மீன ராசியின் அதிபதி குரு பகவானாவார். மீன ராசியில் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி,
ரேவதி நட்சத்திரம் இந்த ராசியில் அடங்கும். மீன ராசியில் பிறந்தவர்கள் கம்பீரமான
தோற்றத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சிரித்த முகத்துடன் காட்சி
தருவார்கள். இவர்கள் எப்பொழுதும் கனவுலகிலே சஞ்சரித்து கொண்டே இருப்பார்கள். மீன
ராசியில் பிறந்தவர்கள் சமயத்துக்கு ஏற்றார் போல் நடந்து கொள்வார்கள்.
மீன ராசிக்காரர்கள் எந்த விஷயத்தையும்
திட்டமிட்டு செய்வார்கள். யாராவது இவர்களை அவமானபடுத்தினால் மறுபடி அவர்களை
சீண்டவே மாட்டார்கள். இவர்கள் வாய் சாதுர்யம் மிக்கவர்கள். எதையும் பேசி பேசியே
சாதித்து கொள்வார்கள். ஆனால் இவர்களால் ரகசியங்களை காக்க முடியாது. இவர்கள்
பொறுமையானவர்களாகவும் அதே சமயம் திறமையானவர்களாகவும் இருப்பார்கள். இவர்களில்
பெரும்பாலோனோர் பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மீன ராசிக்காரர்கள் தேவையில்லாமல் பேசி வம்பை
விலைக்கு வாங்கி கொள்வார்கள். பிறர் செய்கிற வேலைகளில் குற்றம் கண்டுபிடிப்பதில்
வல்லவர்கள். இவர்கள் சுகபோகமாக வாழ வேண்டும் என்றே விரும்புவார்கள். தற்புகழ்ச்சி
அதிகம் கொண்டவர்கள். இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக பாவிக்கும் மனம்
கொண்டவர்கள்.
மீன ராசிக்காரர்கள் தெய்வ பக்தி கொண்டவர்கள்.
பெரியோர்களுக்கு மரியாதை கொடுப்பவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஆன்மீகம்
மற்றும் தெய்வ காரியங்களில் அதிகமாக தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். இந்த
ராசியில் பிறந்த பலரும் சொந்தமாக தொழில் செய்து முன்னேற வேண்டும் என
விரும்புவார்கள். இவர்கள் கடினமாக உழைத்தே செல்வதை சேர்ப்பார்கள்.
மீனராசி பூரட்டாதி நட்சத்திரம், மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி ரேவதி நட்சத்திரம் ஆகியவற்றின் பொதுவான குணங்களை அறிய மேலே உள்ள லிங்க்கை
கிளிக் செய்யவும்.