-->

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை அமைப்பு

உத்திரட்டாதி நட்சத்திரம் வாழ்க்கை முறை

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்


நட்சத்திரம் : உத்திரட்டாதி
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் ராசி : மீனம்
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி
 : சனி
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் ராசி அதிபதி :
 குரு

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :

இவர்களின் பேச்சில் அனல் தெறிக்கும். எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும் என நினைபவர்கள். வாக்கு கொடுத்தால் அதை எப்படியாவது முடித்து காட்டுவார்கள். வெளியூர் பிரயாணம் மேற்கொள்வதிலும் அதிக ஆர்வம் இருக்கும். எதையாவது கற்று கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

இவர்களுக்கு நடிக்க தெரியாது. போலியான வாழ்க்கை வாழபிடிக்காது. இவர்கள் பொதுவாக காட்சியளிக்க கூடியவர்கள். ஆனால் கோபம் வந்தால் முரட்டு தனம் வெளிப்படும். யாரிடமும் உதவி கேட்டு நிற்க மாட்டார்கள். பிடிவாத குணமும், பேச்சில் வேகம் விவேகமும் நிறைந்தவர்கள்.

எதிலும் ஆழமாக யோசித்து செயல்படுவார்கள். வாய்சொல்லில் வீரம் இல்லாமல் செயலில். நீதி, நேர்மைக்கு அஞ்சி வாழ்வார்கள். எதிலும் நடு நிலைமை வகிப்பார்கள். கடின உழைப்பால் முன்னேறி உயர்வான நிலையை அடைவார்கள். சுகமான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள்.

உத்திரட்டாதி முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் முன் கோபம் உடையவர்கள். இவர்கள் மனம் அடிகடி சஞ்சலமடையும். தான, தர்மங்கள் செய்வதில் விருப்பமுள்ளவர்கள். உடல் முழுவதும் முடிகள் நிறைந்திருக்கும்.

உத்திரட்டாதி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்களும் முன் கோபம் உடையவர்கள். பார்பதற்கு சாதுவாக காட்சி யளிப்பர்கள். நல்ல குணம், மற்றும் நடத்தையுள்ளவர். எல்லா நேரத்திலும் இன்பமாக இருப்பதையே விரும்புவர்.

உத்திரட்டாதி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் பலவான்கள். கடவுள் பக்தி நிறைந்தவராக இருப்பார்கள். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க கூடிய ஆற்றல் பெற்றிருப்பார்கள். தன்னை போலவே மாற்றவர்களும் உண்மையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

உத்திரட்டாதி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் நீதிமான்களாக இருப்பார்கள். திடமான என்னத்தை கொண்டவராக இருப்பார்கள். எந்த காரியத்தையும் முழுமையாக செய்ய வேண்டும் என்னும் விருப்பமுடையவர்கள். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை எடுத்து கொள்வார்கள்.

மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும் 

Previous Post Next Post