சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
நட்சத்திரம் : சுவாதி
சுவாதி நட்சத்திரத்தின் அதிபதி : ராகு
சுவாதி நட்சத்திரத்தின் ராசி அதிபதி : சுக்கிரன்
சுவாதி நட்சத்திரத்தின் ராசி அதிபதி : சுக்கிரன்
சுவாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :
சுவாதி நட்சத்திரம்
வரும் பௌர்ணமி நாளில் தான் கடலிலுள்ள சிப்பிகள் ஆக்ஸிஜன் எடுப்பதற்காக கடலின் மேல்
மட்டத்திற்கு வரும். அப்போது மழைதுளிகள் அதன் மேல் பட்டால் முத்தாகும் என்று
ரஸகுளிகை என்னும் சாஸ்திரத்தில் சொல்லபட்டுள்ளது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த சுவாதி
நட்சத்திரத்தை பாப்போம்.
இவர்களுக்கு முன்கோபம் அதிகமிருக்கும். நல்ல அறிவாளிகள். சுற்றத்தார்,
மற்றும் நண்பர்களுக்கு அதிகம் உதவி செய்வார்கள். காந்தம் போல் அனைவரையும் தன் வசம்
இழுத்து கொள்ள கூடிய ஆற்றல் கொண்டவர்கள். தான் சொல்வது தான் சரி என எண்ணம்
கொண்டவர்கள்.
இவர்கள் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். பயப்படும்
குணம் கொண்டவர்கள். எல்லா நேரமும் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள். பிறரை
வசீகரிக்கும் தோற்றம் கொண்டவர்கள். இவர்களுக்கு விளையாட்டு குணம் அதிகமிருக்கும்.
தன் சுய மரியாதையை எந்த சூழ்நிலையிலும் இழக்க விரும்ப
மாட்டார்கள். யார் என்ன சொன்னாலும் தனக்கு சரியெனப் பட்டதை மட்டுமே செய்வார்கள்.
அனைவரிடமும் அன்பாக பழகுவார்கள். இவர்களின் தோற்றத்தை கொண்டு வயதை எடை போட
முடியாது.
சுவாதி முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :
இவர்கள் தைரியசாலிகள், மற்றும் தைரியசாலிகள். பேச்சுதிறமை
உள்ளவர்கள். எதிலும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைவார்கள். இவர்கள பார்பதற்கு
சாதுவாக காட்சியளிப்பார்கள்.
சுவாதி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் :
இவர்கள் நல்ல மனதிடம் உள்ளவர்கள். காரியம் சாதித்து கொள்வதில்
வல்லவர்கள். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்கள் கடும்
உழைப்பாளிகள்.
சுவாதி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் :
இவர்கள் சுயநலம் அதிகம் கொண்டவர்கள். மேலும் கர்வம்
மிக்கவர்கள். கோபத்துடன் கூடிய முரட்டு சுபாவம் கொண்டவர்கள். எளிதில்
உணர்ச்சிவசபடகூடியவர்கள். ஆனால் கடமை உணார்ச்சி மிக்கவர்கள்.
சுவாதி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் :
மற்ற ராசிகளின் பொதுவான குணங்களை இங்கே கிளிக் செய்வதன்மூலம் காணலாம்.
மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்