-->

துலாம் ராசியின் பொதுவான குணம்

துலாம் ராசி குணங்கள்


துலாம் ராசியின் பொதுவான பலன்கள்

துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவானாவார். துலாம் ராசியில் சித்திரை நட்சத்திரத்தின் 3, 4ம் பாதமும், சுவாதி, விசாகம் நட்சத்திரத்தின் 1,2,3  பாதங்களும் இதில் அடங்கும். துலாம் ராசிக்காரர்கள் தங்களை அழகு படுத்திகொள்வதில் ஆர்வம் அதிகம் கொண்டவர்கள். வித விதமான ஆடை, ஆபரணங்களை அணிவதில் விருப்பமுடையவர்கள். இவர்கள் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்கிற வேறுபாடு பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகுவார்கள்.

நீதி, நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்கள். எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருபதையே விரும்புவார்கள். எல்லா விஷயத்தையும் அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவார்கள். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய மாட்டார்கள். இவர்கள் ஒருவருக்கு வாக்கு கொடுத்துவிட்டால் அதை எப்பாடு பட்டாயினும் செய்து முடித்து காட்டுவார்கள். தோல்விகள் வந்தால் துவண்டு போக மாட்டார்கள்.

துலாம் ராசிகாரர்கள் யாரையும் சார்ந்து இருக்க மாட்டார்கள். இவர்களுக்கு வைராக்கியம் அதிகம் இருக்கும். இவர்கள் கௌரவத்திற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்களின் வாழ்க்கைதுனையும் இவர்களின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்கள். இவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள். குடும்ப பொறுப்புகள் அதிகம் இருக்கும். பொது சேவைகள் செய்வார்கள்.

துலாம் ராசிகாரர்களிடம் பேசி ஜெயிப்பது என்பது இயலாத காரியம். மற்றவர்களை துல்லியமாக எடை போடுவதில் வல்லவர்கள். பயணங்கள் செய்வது இவர்களுக்கு விருப்பமான ஒன்று. தன் சொந்த முயற்சியில் முன்னேறுவதையே விரும்புவார்கள். யாருடைய தயவையும் எதிர் பார்க்க மாட்டார்கள். 
     
துலாம் ராசி சித்திரை நட்சத்திரம், துலாம் சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி விசாகம் நட்சத்திரம், ஆகியவற்றின் பொதுவான குணங்களை அறிய மேலே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.




Previous Post Next Post