-->

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை அமைப்பு

திருவோணம் நட்சத்திரம் வாழ்க்கை முறை


திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்


நட்சத்திரம் : திருவோணம்
திருவோணம் நட்சத்திரத்தின் ராசி : மகரம்
திருவோணம் நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன்
திருவோணம் நட்சத்திரத்தின் ராசி அதிபதி :
 சனி

திருவோணம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :

இது ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதார நட்சத்திரமாகும். இவர்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள்.ஆனால் உடனே சமாதானமும் ஆவார்கள். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் மிக கவனமாக செயல்படுவார்கள். சுறுசுறுப்பான மனநிலையை கொண்டவர்கள்.

சிக்கனமாக இருப்பார்கள். யாருடைய மனதையும் புண்படுத்த மாட்டார்கள். யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள். நல்ல நீதிமான்கள், பசியை பொருத்து கொள்ள மாட்டார்கள். அழகான உடல்வாகு கொண்டவர்கள். எப்பொழுதும் புன்னகை புன்னகையுடன் விளங்கும் முகமும் இருக்கும் இல்லையென்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்கள்.

மற்றவர்கள் தவறு செய்தால் அதை கண்டிப்பார்கள். சுத்தமான ஆடை அணிவதை விரும்புவார்கள். பொது விஷயங்களில் ஆர்வமுடன் பங்கேற்பார்கள். பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். பெரியோர்களிடத்தில் மரியாதை செலுத்துவார்கள்.

திருவோணம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் சௌகாரியமாக இருப்பதையே விரும்புவார்கள். காரியத்தில் இறங்கி விட்டால் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். புத்திசாலிகளாக விளங்குவார்கள். சுத்தமாக இருப்பதையே விரும்புவார்கள்.

திருவோணம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்களுக்கு தலைமை தாங்கும் பண்பு இயற்கையாகவே இருக்கும். தானம்,தர்மம் செய்வதில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும். நுண் கலைகளில் ஈடுபாடு கொண்டவர்கள். கோபம் இருக்கும் இடத்தில குணம் இருக்கும் என்பார்கள். அது இவர்கள் விஷயத்தில் நிறையவே பொருந்தும்.

திருவோணம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் தெளிவான சிந்தனை கொண்டவர்கள். எதையும் திட்டமிட்டு செய்வார்கள். அதே சமயம் ஆவேச குணம் கொண்டவர்கள். எதிலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பார்கள். ஒழுக்கம் மற்றும் நேர்மையுடன் இருக்க விரும்புவார்கள்.

திருவோணம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் :


இவர்கள் பாசமும், நேசமும் மிக்கவர்கள். நியாயமாக இருக்க வேண்டும் விரும்புவார்கள். எடுத்து கொண்ட காரியத்தை முடிக்க தீவிரமாக உழைக்க கூடியவர்கள்.


மற்ற ராசிகளின் பொதுவான குணங்களை இங்கே கிளிக் செய்வதன்மூலம் காணலாம்.

மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும் 
Previous Post Next Post