-->

மகர ராசியின் பொதுவான குணம்

மகர ராசி குணங்கள்


மகர ராசியின் பொதுவான குணங்கள்

மகர ராசியின் அதிபதி சனி பகவானாவார்.  மகர ராசியில் உத்திராடம் 1, 2, 3 பாதங்களும்,  திருவோணம், அவிட்டம் 1,2 ம் பாதங்கள் ஆகியவை அடங்கும். மகர ராசிகார்கள் பொதுவாக விடமுயற்சி உடையவர்கள். இவர்கள் பொறுமையாகவே எல்லா விஷயங்களையும் செய்வார்கள். இவர்கள் எப்பொழுதுமே யோசித்து கொண்டே இருப்பார்கள். எவ்வளவு பெரிய தோல்வி கண்டாலும் சோர்வு அடைய மாட்டார்கள். அதிலிருந்து பாடம் கற்று மீண்டும் முயற்சி செய்வார்கள். இவர்கள் இரக்க சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள்.

மகர ராசிகார்களின் பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். எதிரிகளுக்கும் உதவி தேவை என்ற நிலை வந்துவிட்டால் பகையை மறந்து உதவி செய்வார்கள். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டம், துன்பம் வந்தாலும் அலட்டி கொள்ள மாட்டார்கள். பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்கள். எல்லா விஷயங்களிலும் ஆதாயம் அடைய நினைப்பார்கள். இவர்கள் சமயங்களில் நகைச்வையாளராக மாறி மற்றவர்களை சிரிக்கவும் வைப்பார்கள். இவர்கள் வெகுளித்தனமான வெள்ளை மனம் கொண்டவர்கள்.

மகர ராசிகார்களுக்கு குடும்பத்தின் மேல் அதிக பாசம் இருக்கும். பெற்றவர்கள், பிள்ளைகள் மேல் அதிக அன்பு கொண்டிருப்பார்கள். தான் கஷ்டபட்டாலும் மற்றவர்கள் மனம் கோணாத அளவுக்கு நடந்து கொள்வார்கள். இவர்கள் கடுமையான உழைப்பாளிகள். இவர்கள் அவ்வளவு எளிதில் யாருக்கும் வாக்கு கொடுக்க மாட்டார்கள். வாக்கு கொடுத்துவிட்டால் அதை எப்படியாவது முடித்து கொடுத்து விடுவார்கள். இவர்கள் அடம்பரமாக வாழ வீண் செலவு செய்வார்கள்.

மகர ராசிகார்கள் செய்யும் தொழிலை தெய்வமாக கருதுவார்கள். எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் முன்னேற்றமும், வெற்றியும் பெறுவார்கள். இவர்களுக்கு வாழ்வின் முற்பகுதியை விட பிற்பகுதி தான் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும்.

மகரராசி உத்திராடம் நட்சத்திரம், மகரராசி திருவோணம் நட்சத்திரம், மகரராசி அவிட்டம் நட்சத்திரம் ஆகியவற்றின் பொதுவான குணங்களை அறிய மேலே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.




Previous Post Next Post